வல்லினம் மெல்லினம் இடையினம்

ஆசிரியர்: என்.சொக்கன்

Category அறிவியல்
Publication மதி நிலையம்
FormatPaperback
Pages 160
First EditionOct 2012
$4.5      

தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866

சாஃப்ட்வேர் துறையைச் சார்ந்தவர்கள், சாராதவர்கள் என உலகை இரண்டாகப் பிரித்துவிடலாம். ஒயிட் காலர் வேலை, ஐந்து இலக்க சம்பளம், சொகுசான வாழ்க்கை என இத்துறையின் ஒரு பக்கத்தைச் சொல்லலாம். இப்படிப் பணத்தை அள்ளுகிறார்களே, இவர்கள் எல்லோரும் கடவுளால் பிரத்தியேமாக ஆசீர்வதிக்கப்பட்டவர்களா? இத்துறைக்குள் நுழைந்துவிட்டால், பூமியிலேயே சொர்க்கத்தின் சுகத்தை அனுபவிக்கலாமா? அப்படி என்ன வேலைதான் செய்கிறார்கள்? இப்படிப் பல கேள்விகள் இத்துறை சாராதவர்களில் மனத்தில் உறுத்திக் கொண்டே இருக்கும். பரவலாக அறியப்படாத இத்துறையின் மறு பக்கத்தை பைட், பைட்டாக படம் பிடித்துக் காட்டுகிறது இந்நூல். இதுவரை தமிழில் யாருமே எட்டிப்பார்க்காத சாஃப்ட்வேர் துறை சார்ந்த பிரச்னைகளை வெளிச்சம் போட்டு காண்பிக்கும் நூலாசிரியர் என். சொக்கன், பெங்களூரில் Infact Infotech என்ற நிறுவனத்தின் இயக்குநராகப் பணியாற்றிக் கொண்டிருக்கிறார்.

உங்கள் கருத்துக்களை பகிர :