வர்ஷினியின் வண்ணத்துப்பூச்சிகள்

ஆசிரியர்: திருவெங்கட்

Category கவிதைகள்
Publication அகநி வெளியீடு
FormatPaperback
Pages 80
Weight100 grams
₹70.00 ₹65.80    You Save ₹4
(6% OFF)
Delivery in 4-7 Days
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866எங்கோ தொலைதூரத்தில் மழை பெய்வதை, மேகக் கருக்கலோ, ஈரக்காற்றோ நம்மிடம் சொல்லி விட்டுப் போகின்றன. பக்கத்து வீட்டுத் தோட்டத்தில் மல்லிகை பூத்திருப்பதை, ஆளுயுர சுவர்களைக் கடந்தும் நம் நாசிகளுக்கு கடத்தி விடுகிறது அதன் வாசம். குழந்தை அழுமுன்னே அதன் பசியை பார்வையாலேயே கண்டுணர்ந்து பாலூட்டுகிறாள் தாய். மேகக் கருக்கல், ஈரக்காற்று, மல்லிகை வாசம், பாலூட்டும் தாய் என பல்வேறு வகைகளிலும் பரிணமிப்பவனே கவிஞன்.
தான் வாழும் சமூகத்தின் தேவை என்னவென்பதை கண்டு, அதற்கான கவன ஈர்ப்பினைத் தன் கவிதைகளின் வழியே முன்மொழிவதும் ஒரு கவிஞனின் பணியே. கவிஞன் ஒரு காலக் கணினி. கவிஞன் தான் பெற்றிருக்கும் சமூக ஞானம், சமூகத்தின் மீது அவன் கொண்டுள்ள அக்கறை, சக மனிதர்கள் மேல் காட்டும் பேரன்பு, காயம்பட்டவர்கள் மீதான கனிந்த பார்வை... என தன்னையே கவிதைகளில் தரும் ஆளுமை கவிஞனுக்கு மட்டுமே வாய்த்த பேறு.இதுவரை பார்த்தேயிராத ஒரு காட்டுப்பூவின் நறுமணம், பன்னெடுங் காலத்திற்குப் பிறகு கொட்டித்தீர்த்த பெருமழையோடு மண்ணையும் சேர்த்துக் குலைத்த ஈர வாசம், முத்தமிட நெருங்குகையில் குழந்தையின் உதட்டிலிருந்து கசிந்துகொண்டிருக்கும் தாய்ப்பாலின் மணம்... இவையனைத்தும் சேர்ந்த கலவை மணத்தை கவிஞர் திருவெங்கட் எழுதிய கவிதைகளை வாசிக்கையில் நம்மால் உய்த்துணர முடிகிறது.

உங்கள் கருத்துக்களை பகிர :
கவிதைகள் :

அகநி வெளியீடு :