வராகமிகிரரின் பிருகத் ஜாதகச் சாரம்

ஆசிரியர்: ஆசிரியர் குழு

Category ஜோதிடம்
Formatpaper back
Pages 168
Weight150 grams
₹75.00 ₹71.25    You Save ₹3
(5% OFF)
Only 1 copy left! Delivery in 4-7 Days
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866வராக மிகிரர் வானியல் மேதையான ஆதித்ய தாசரின் மகன் ஆவார். தம் தந்தையிடம் சகல சாத்திரங்களையும் கற்று உணர்ந்து, பெரும் அறிவாளராக இவரும் விளங்கினார். தமக்கு முற்பட்ட காலத்து ஜோதிட நூல்களை எல்லாம் கற்று, ஆராய்ந்து, மக்களுக்குப் பயன்பட வேண்டும் என்ற எண்ணத்துடன், இவர் எழுதியுள்ள நூல்தான் 'பிருகத் ஜாதகம்' ஆகும். இந்த பிருகத் ஜாதகம் ஜோதிட சாத்திரங்களுக்குள் சிறப்பாகப் போற்றப்பெறுவது. வடமொழியிலான இதைத் தமிழிலும் முன்பே சிலர் மொழி பெயர்த்துள்ளனர். இந்த நூல் எளிமையாக அனைவரும் பிருகத் ஜாதகத்தின் கருத் துக்களைத் தெரிந்துகொள்ள உதவும் வகையில் அமைக்கப் பெற்று வெளிவருவதாகும்.
பிற ஜோதிட நூல்களால் அறியவியலாத பல உண்மைகளை, வாசகர்கள் இந்த நூலால் அறிந்து பயன் பெறலாம். உதாரணமாக, இதிலுள்ள நஷ்ட ஜாதகப் படலம், பிறந்த நேரம் தெரியாதவர்களுக்கு ஜாதகம் கணித்துக்கொள்வதற்கு உதவும் நுட்பமான முறையாகும். இப்படிப் பல படலங்களிலும் அரிய செய்திகள் உள்ளன. ஜோதிடக் கலைஞர்களுக்கும், ஜோதிடக் கலையில் ஆர்வமுள்ள அன்பர்களுக்கும், இந்த நூல், ஒரு சிறந்த விருந்தாகும் என்று நம்புகின்றோம்.

உங்கள் கருத்துக்களை பகிர :
ஆசிரியர் குழு :

ஜோதிடம் :

மணிமேகலைப் பிரசுரம் :