வரலாறு கண்டவர்களின் வார்த்தை ஜாலங்கள் பாகம் -1

ஆசிரியர்: கவிஞர் தெய்வச்சிலை

Category பொது நூல்கள்
Publication நக்கீரன் பதிப்பகம்
FormatPaper back
Pages 218
ISBN978-93-81828-92-2
Weight200 grams
₹175.00 ₹166.25    You Save ₹8
(5% OFF)
Only 1 copy left! Delivery in 4-7 Days
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866பேசிப் பேசியே நாட்டைப் பிடித்த கட்சி" என்று திராவிட முன்னேற்றக் கழகத்தை சொல்வார்கள். பேச்சு என்றால் ஏனோ தானோ வென்றோ, தொணதொணவென்றோ பேசவில்லை. வெறும் பேச்சு பேசவில்லை, வெட்டிப் பேச்சு பேசவில்லை. தி.மு.க.வின் மேடைப்பேச்சு அத்தனையும் தொலைநோக்குப் பேச்சு, கொள்கை மூச்சு, லட்சிய வீச்சு. தந்தை பெரியார், ஏ.டி.பன்னீர்செல்வம், பேரறிஞர் அண்ணா , கலைஞர், நாவலர் நெடுஞ்செழியன், நாஞ்சில் மனோகரன், பேராசிரியர் அன்பழகன், ஈ.வெ.கி.சம்பத் போன்றவர்கள் அரசியல் மேடைகளிலும் சரி, சட்டமன்ற, நாடாளுமன்றங்களிலும் சரி திறம்பட பேசுவதிலும் சுவைபட பேசுவதிலும் மிகப்பெரும் ஆற்றலாளர்கள்.
அதேபோல் மறைந்த முத்தமிழ்க் காவலர் கி.ஆ.பெ., தவத்திரு குன்றக்குடி அடிகளார் போன்றவர்கள் தற்போது பேராசிரியர் சாலமன் பாப்பையா, கு.ஞானசம்பந்தன், நடிகர் சிவக்குமார் போன்றவர்கள் இலக்கிய மேடைகளிலும் பட்டிமன்ற மேடைகளிலும் பேசி ஜொலிப்பவர்கள், ஜெயிப்பவர்கள்.
அண்ணன் தெய்வச்சிலை அவர்கள் எழுதியுள்ள 'வரலாறு கண்டவர் களின் வார்த்தை ஜாலங்கள்' (இரண்டு பாகங்கள்) என்ற இந்த நூலில் தமிழகத் தலைவர்கள் தொடங்கி, உலகத் தலைவர்கள் வரை அவர்களின் சொற்சுவை, பொருட்சுவை, நகைச்சுவை இவற்றுடன் கலந்து அவர்களின் வார்த்தை ஜாலங்களை வர்ணஜாலங்களைத் தொகுத்து தந்திருக்கிறார்.

உங்கள் கருத்துக்களை பகிர :
கவிஞர் தெய்வச்சிலை :

பொது நூல்கள் :

நக்கீரன் பதிப்பகம் :