வரலாறு என்றால் என்ன?

ஆசிரியர்: நா.தர்மராஜன்

Category வரலாறு
Publication அலைகள் வெளியீட்டகம்
FormatPaper back
Pages 178
Weight200 grams
₹130.00 ₹117.00    You Save ₹13
(10% OFF)
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866இந்தியர்களின் வரலாற்றை இந்தியர்கள் எழுதவில்லை என்பது வரலாறு இந்தியாவின் வரலாறு என்பது படையெடுப்பாளர்களின் வரலாறே' என்பார் கார்ல் மார்க்ஸ். பொதுவாக இந்தியர்களுக்கு வரலாற்று அறிவு இல்லை என்றும், வரலாறே இல்லை என்றும் ஐரோப்பியர்கள் கூறி வந்தனர். இந்தியர்களுக்கு என்று தனி வரலாறு உண்டு என்று எதிர்வாதம் புரிந்து அதற்காகவே வரலாறு எழுதிய இந்தியர்களும் உண்டு. பொதுவாகவே, அமெரிக்கா, ஐரோப்பா நாடுகளின் கல்வியில் வரலாற்றுப் பாடத்திற்கு சிறப்பிடம் உண்டு என்று கூறுவார்கள். ஆனால் இந்தியக் கல்வியில் அதற்கான இடம் மிகவும் குறைவு. தற்போது பாடத் திட்டத்திலிருந்து வரலாற்றுக் கல்வி நீக்கப் பட்டது போன்ற நிலைமையே தோன்றுகிறது. வேறு சிறப்புப் பாடப்பிரிவுகளில் படிக்க இடம் கிடைக்காதவர்கள் வரலாறு, தமிழ் இலக்கியம் போன்ற பாடங்களைப் படிக்கும் சூழல் அதிகரித்து வருகிறது. இது மிகவும் வருத்தத்திற்குரியது.
பாடத்திட்டத்தில் உள்ள வரலாறுகள் அனைத்தும் மன்னர்கள், அவர்கள் பரம்பரை வெற்றி அல்லது வீழ்ச்சி என்ற அளவிலேயே விவரிக்கப்படுகின்றன. உலகம் முழுவதும் எழுதப்பட்டுள்ள வரலாறுகள் அனைத்தும் இதற்கு விதிவிலக்கல்ல. இந்த நோக்கத்தைப் பற்றி கேள்வி எழுப்பியவர்கள் மார்க்சிய வரலாற்று ஆசிரியர்களே. 'குடிகள் இல்லாமல் கொற்றவன் இல்லை' என்று நிறுவியவர்களும் அவர்களே இந்நூலாசிரியர் ஈ. எச். கார் வரலாற்றை அறியும் முறைமை பற்றி இந்நூலில் விளக்குகிறார். ஐரோப்பிய வரலாற்றைப் பற்றியதாக இருந்தாலும் அனைத்து நாட்டு வரலாறுகளையும் இதன் மூலம் விளக்கலாம்.

உங்கள் கருத்துக்களை பகிர :
நா.தர்மராஜன் :

வரலாறு :

அலைகள் வெளியீட்டகம் :