வந்தார்கள்.. வென்றார்கள்!
₹350.00 ₹339.50 (3% OFF)
வந்தார்கள்.. வென்றார்கள்!
₹330.00 ₹320.10 (3% OFF)

வந்தார்கள்.. வென்றார்கள்!

ஆசிரியர்: மதன்

Category வரலாறு
Publication விகடன் பிரசுரம்
FormatPaperback
Pages 280
ISBN978-81-8978-059-3
Weight350 grams
₹320.00 ₹310.40    You Save ₹9
(3% OFF)
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866
புத்தகத்தின் மேம்பட்ட உள்பக்கம் பார்க்க Click Here



மதன் என் இனிய நண்பர். அவர் ஒரு தேர்ந்த கார்ட்டூன் சித்திரக்காரர் என்பது நாடறிந்த உண்மை , மதன் ஒரு நல்ல பத்திரிகாசிரியர்... இயல்பாக, திறமையாகத் தமிழில் எழுதக்கூடியவர் என்பது அத்தனை பரவலாகத் தமிழ் அன்பர்களுக்குத் தெரிந்திருக்கவில்லை... 'வந்தார்கள்.. வென்றார்கள்' வரும்வரை.மதன் இப்போது எழுத்துத்துறைக்கும் வந்துவிட்டார், வென்று விட்டார். முன்பு ஜூனியர் விகடனில் நான் 'ஏன்? எதற்கு? எப்படி?' எழுதும்போது அங்கங்கே சில பதில்களில் மதனின் கைவண்ணம் புகுவதை நான் சந்தோஷத்துடன் அனுமதித்தேன். அப்போதே எனக்குத் தெரிந்துபோயிற்று - ஒரு நாள் இவர் முழுப் புத்தகம் எழுதி வெல்லப் போகிறார் என்று. என்ன எழுதப் போகிறார் என்பதுதான் சஸ்பென்ஸாக இருந்தது. சரித்திரம் எழுதப் போகிறார் என்று அறிவிப்பு வந்தவுடன் சற்று ஆச்சரியப்பட்டேன். மதனுக்கு விஞ்ஞானத்தில் ஆர்வம் உண்டு என்பது எனக்குத் தெரியும். நிறைய ஆங்கிலப் புத்தகங்கள் படிப்பார் என்பதும் தெரியும், மதன் இந்திய சரித்திரத்தை, இத்தனை புத்தகங்களை இவ்வளவு ஆழமாகப் படித்திருக்கிறார் என்பது இன்பமான அதிர்ச்சி அளித்தது.

ஆனந்த விகடனில் 1970-ல் கார்ட்டூனிஸ்ட்டாகச் சேர்ந்து விகடன் நிறுவனத்தின் ஆனந்த விகடன், ஜூனியர் விகடன், ஜூனியர் போஸ்ட் ஆகிய மூன்று பத்திரிகைகளுக்கும் இணை ஆசிரியராகப் பணியாற்றினார். மதனின் முழுப்பெயர் மாடபூசி கிருஷ்ணஸ்வாமி கோவிந்தகுமார். மனைவி ஜெயந்தி. இந்தத் தம்பதிக்கு திவ்யா, அமிதா என்று இரு மகள்கள் உண்டு. மதனின் பள்ளிப் பருவம் சென்னை யில்... திருவல்லிக்கேணி இந்து உயர்நிலைப்பள்ளி. கல்லூரிகள்: விவேகானந்தா, சென்னை மாநிலக் கல்லூரி. கல்லூரியில் அவர் படித்த சப்ஜெக்ட் சரித்திரமல்ல, பௌதீகம் என்பது குறிப்பிடத்தக்கது!

உங்கள் கருத்துக்களை பகிர :
மதன் :

வரலாறு :

விகடன் பிரசுரம் :