வண்டாடப் பூ மலர
ஆசிரியர்:
ம.பெ.சீனிவாசன்
விலை ரூ.125
https://marinabooks.com/detailed/%E0%AE%B5%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%AA%E0%AF%8D+%E0%AE%AA%E0%AF%82+%E0%AE%AE%E0%AE%B2%E0%AE%B0?id=1522-3739-6592-0141
{1522-3739-6592-0141 [{புத்தகம் பற்றி ஆய்வு நோக்கிலும் இரசனைப் போக்கிலும் அமைந்த சின்னஞ்சிறு கட்டுரைகளைக் கொண்ட நூல் இது. 'வண்டாடப் பூமலர' என்னும் முதற் கட்டுரையே நூலின் தலைப்புமாயிற்று. புலர்ந்தும் புலராச் சிறுகாலைப் பொழுதைப் போலச் சற்றே அறிந்தும் அறியாமலும் இருக்கக்கூடிய தமிழ் இலக்கியச் செய்திகளை துலக்கிக் காட்டும் முயற்சியை இந்நூலிற் காணலாம். சங்க நூல் தொடங்கிச் சமகால இலக்கியம் வரை இதிற் பேசப்பட்டுள்ளன.
<br/> இதில் உள்ள இரண்டு கட்டுரைகள் 'தினமணி'யில் முன்பே வெளிவந்தவை. 'ஐம்பால்' பற்றிய கட்டுரையைப் படித்த மூதறிஞர் தமிழண்ணல், அறிஞர் தெ.ஞானசுந்தரம் ஆகியோர் கூறிய பாராட்டு மொழிகளே இந்நூல் விளைச்சலுக்கு நல்வித்து ஆயின. எனவே 'தினமணி'யோடு இத் 'தமிழ்ச் சுடர்மணிகளுக்கும்' என் நன்றி உரியது. கைக்கு அணியாகத் திகழும் மிகு வனப்புடன் இதனை வெளியிட்டுள்ளது கவிதா பப்ளிகேஷன். கையெழுத்துப்படியை உகப்புடன் ஏற்றுக் காலக் கழிவின்றி நூலைப் பதிப்பித்து உதவியவர் நண்பர் 'கவிதா சொக்கலிங்கம்' அவர்கள். புதிதாக ஒரு நூல் வெளிவரும் போது மனத்திற் பொங்கும் மகிழ்ச்சி புதிது; புதுமணத் தேறலைப் போல அது புதியது. அத்தகைய மகிழ்ச்சியைத் தந்த நண்பர்க்கு என் நன்றி என்றும் உரியது.
<br/>}]}
-----------------------
www.marinabooks.com
80,000+ தமிழ்ப் புத்தகங்கள் !!!
10,000+ எழுத்தாளர்கள் !!!
1,000+ பதிப்பகங்கள் !!!
Call / SMS / WhatsApp 88834 88866