வடிவேலர் சதகம்

ஆசிரியர்: முனைவர் ப.நீலா

Category இலக்கியம்
Publication கௌரா பதிப்பக குழுமம்
FormatPaperBack
Pages 184
Weight200 grams
₹120.00 ₹108.00    You Save ₹12
(10% OFF)
Only 1 copy left! Delivery in 4-7 Days
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866தமிழ் இலக்கியப் பண்ணையில் தோன்றிய சிற்றிலக்கியங்கள் என்பவை 96 வகை என்று முன்னோர் வரையறுத்திருந்தாலும் கால வளர்ச்சிக்கேற்ப ஏற்பட்ட இலக்கிய வளர்ச்சியில் அவை மிகப்பலவாக விரிவடைந்துள்ளன. அச்சிற்றிலக்கிய வகைகளில் ஒன்றுதான் சதகம் என்பது. சதகம் என்பது 100 பாடல்களால் அமைவது பொது இயல்பு. இதனில் வேறுபாடுகளும் உண்டு. வடிவேலர் சதகம் என்னும் இந்நூலில் காப்பு, அவையடக்கம், வாழி நீங்கலாக 100 செய்யுட்களைக்கொண்டுள்ளது. கொங்காபதி என்னும் திருத்தலத்தில் எழுந்தருள்கின்ற வடிவேலனாசிய முருகப் பெருமானின் புகழைப் பாடுகின்றது இந்த நூல். ஒவ்வொரு பாடலும் “வடிவேலனே” என்னும் சொல்லால் நிறைவு பெறுவதால் இந்த நூல் “வடிவேலர் சதகம்” எனப் பெயர் பெற்றது.
இந்தச் சதக நூலை 'கரட்டடி பாளையம் புதூர்' என்னும் தலத்தைச் சார்ந்த கவிமன்னர் காளியண்ண கவுண்டர் என்பவர் எழுதியுள்ளார். அவர் சிறந்த முருக பக்தர் என அறிகிறோம். சந்தப்பாக்கள் பாடும் ஆற்றலுடையவர். முருகப் பெருமான் திருவிளையாடல்களைத் தொகுத்து முறைப்படுத்திக் கொடுக்கும் ஆற்றல் படைத்தவர்.
இந்தச் சிறந்த நூலுக்கு கொங்குமண்டல சேக்கிழார் சிவநெறி வழிபாட்டுக் கூட்ட நெறியாளர் சைவத் திரு. அ. சுப்பிரமணியன் அவர்கள் சிறந்ததொரு உரையெழுதி உள்ளார். அவருடைய உரை பொழிப்புரை, விளக்கம் என்ற முறையில் அமைந்துள்ளது. விளக்கவுரையில் புராண இதிகாச வரலாற்று இலக்கியத் தொடர்களுக்கான விளக்கம் சிறப்புக் குறிப்புகள் ஆகியன இடம்பெற்றுள்ளன. உரை எளிமையும் தெளிவும் உடையதாக உள்ளது.

உங்கள் கருத்துக்களை பகிர :
இலக்கியம் :

கௌரா பதிப்பக குழுமம் :