வடகரை (இலக்கியத்தின் இன்னொரு முகம்)
ஆசிரியர்:
அ.வெண்ணிலா
விலை ரூ.100
https://marinabooks.com/detailed/%E0%AE%B5%E0%AE%9F%E0%AE%95%E0%AE%B0%E0%AF%88+%28%E0%AE%87%E0%AE%B2%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%81+%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D%29?id=1357-7891-2641-7393
{1357-7891-2641-7393 [{புத்தகம் பற்றி

தொடக்கத்திலிருந்து... ஆதியிலிருந்து அந்தம் வரை... இந்நூல், பெண்ணின் ஆறாத் துயரத்தையே சொல்லுகிறது. இந்த நூல் மட்டுமா, ராமாயண மகாபாரதங்களிலிருந்து இன்றைய கதைகள் வரை பெண்களின் துயரங்களைப் பழியப் பழிய சொல்லிக் கொண்டே போகின்றன. கடைசியில், மேகமின்றி, மின்னலின்றி வெண் இடி தாக்கியது போல் வாசகன் தலையில் ஓர் இடி விழுகிறது. அதைப் படித்ததும் அதற்கு மேல் நகர முடியவில்லை. நாலு நாட்கள் கிடையிலேயே கிடந்தது புத்தகம், ராய கோபுரம் போல. அதற்குப்பிறகு என்ன இருக்கு படிக்க 'வடகரை' இரண்டாம் பாகம் வந்தால் தானுண்டு.- கி.ராஜநாராயணன், தி இந்து தமிழ் 09.05.2015

The central characters of Vadakarai, Oru Vamsathin Varalaru, a fictionalised narrative of historical events, are actually women who remained silent victims tophilandering ways of their dominant husbands with Sultan-like lifestyles. Whether it is Sundara, an excellent cook, who is forced to beg for food after her husband's death or Nondi Meenakshi who vacates her husband's place with her pregnant sister, life is a constant struggle. But they never complain. The Hindu - 19.01.2015

ஐ.ஏ.எஸ். அதிகாரி டாக்டர் மு.ராஜேந்திரன் எழுதியுள்ள வடகரை ஒரு வம்சத்தின் வரலாறு என்ற நூல், அவரது குடும்பத்தினரின் 600 ஆண்டு வம்ச வரலாறு மட்டுமல்ல, தென் மாவட்டங்களின் குறிப்பாக மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம், தேனி போன்ற மாவட்டங்களின் கலாச்சார வரலாறு. ஏதோ காதில் விழுந்த செய்தியாக எழுதாமல், அறுநூறு ஆண்டுகால சம்பவங்களையும் ஆதாரத்தோடு அத்தனை விவரங்களையும் திரட்டி எதையும் ஒளிக்காமல் எழுதியிருக்கிறார். படிக்கத் தொடங்கியது முதல் 500 பக்கங்களுமே பரபரப்பாக ஆர்வத்துடன் படிக்க வைத்தாலும் இறுதியில் கண்ணீரோடு முடிக்க வைத்து இருக்கிறார். மறக்க முடியாத நூல் இது.- தினத்தந்தி

ஒரு வம்சம் 600 ஆண்டு காலத்தில் எப்படியெல்லாம் துளிர்த்தும் துவம்சம் ஆகியும் உருமாறிக் கொண்டு இருந்தது என்பதை சொல்லும் வரலாறு இது. புனைவுகளில் மட்டும்தான் திடுக்கிடும் திருப்பங்களும், அலற வைக்கும் அழுகைகளும் நல்லது. கூடி வரும்போது குலமே கெட்டுப் போகும் அளவுக்கு இழப்புகளும் இருக்க முடியுமா? இல்லை, உண்மை வரலாற்றிலும் இப்படி படிநிலை வளர்ச்சியைப் போல் நடக்கும் அல்லவா? அப்படி ஒரு குடும்பத்துக்காரராக டாக்டர். மு.ராஜேந்திரன் இருக்கிறார். எங்கோ ஓர் ஊருக்குப் போய், எவர் குலத்து கதையையோ கள ஆய்வு செய்து எழுதுவதைவிட தனது சொந்த வம்சத்தைப் பற்றி எழுதப் புகுந்தது முதல் துணிச்சல், அதில் எதையும் மறைக்காமல், உண்மையை பட்டவர்த்தனமாகச் சொல்ல முடிவெடுத்தது அடுத்த துணிச்சல்.அதை லாவகமான மொழியில் சொல்லியும் காட்டியுள்ளதுதான் இந்த நூலின் வெற்றி.- ஜூனியர் விகடன், 03.05.2015

www.marinabooks.com
80,000+ தமிழ்ப் புத்தகங்கள் !!!
10,000+ எழுத்தாளர்கள் !!!
1,000+ பதிப்பகங்கள் !!!
Call / SMS / WhatsApp 88834 88866