வங்கிகள் A to Z

ஆசிரியர்: ஜி.எஸ்.எஸ்

Category வணிகம்
Publication விகடன் பிரசுரம்
Pages N/A
₹80.00 ₹76.00    You Save ₹4
(5% OFF)

Out of Stock!

தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866இன்றைய காலகட்டத்தில் வங்கிகள் மக்களுக்கு ஒரு வரப்பிரசாதம். பணத்தைப் பாதுகாப்பாக வைத்திருப்பதற்குத்தான் ஆரம்பத்தில் வங்கிகள் பயன்பட்டன. ஆனால், காலப்போக்கில் பொதுமக்களின் தேவைகள் அதிகரிக்க அதிகரிக்க, வியாபாரத்துக்கு கடன், விவசாயத்துக்குக் கடன், கிரெடிட் கார்ட் மூலம் கடன், வீடு கட்டுவதற்குக் கடன்... என வங்கிகளின் சேவைகளும் அதிகரித்துவிட்டன. மக்கள் வாழ்வில் ஓர் அங்கமாகிவிட்டது வங்கி.
வங்கிகளில் என்னென்ன வகைக் கணக்குகள் இருக்கின்றன, அவற்றை நிர்வகிப்பது எப்படி, தன் காலத்துக்குப் பிறகு வாரிசுகள் அந்தக் கணக்கை இயக்குவது எப்படி, ஏடிஎம், கடன், வரைவோலை, காசோலை ஆகிய அனைத்தையும் திறம்பட நிர்வகிப்பது எப்படி..? போன்ற சந்தேகங்களைத் தெளிவுபடுத்தும் வகையில், வங்கிகள் மூலம் நாம் பெறக்கூடிய சேவைகளைப் பற்றிய எல்லா தகவல்களையும் ஜி.எஸ்.எஸ். இந்த நூலில் தெளிவாக விவரித்திருக்கிறார்.
வங்கிகள் நமது பணத்தைப் பரிமாற்றம் செய்யும் விதத்தையும், வாடிக்கையாளரின் பாதுகாப்புக்கு ரிசர்வ் வங்கி எடுத்துள்ள முயற்சிகளையும் நமக்கு நம்பிக்கை தரும் விதத்தில் விளக்கியிருக்கிறார் நூலாசிரியர்.
வங்கிக் கணக்கில் பாதுகாப்பாக செய்ய வேண்டிய சில மாற்றங்களையோ அல்லது சில நுணுக்கங்களையோ இதுவரை செய்யாமல் விட்டிருந்தால், இந்த நூலைப் படித்துவிட்டு வங்கிக் கணக்கில் பொருத்தமான மாற்றங்களைச் செய்யலாம். அதனால், எதிர்காலத்தில் சில சிக்கல்களைத் தவிர்க்கலாம்.
மொத்தத்தில் இந்த நூலைப் படித்துவிட்டு வங்கிக்குள் நுழைந்தால் மலைப்பு ஏற்படாது; காரியங்களை எளிதாகவும் கச்சிதமாகவும் முடித்துக்கொண்டு நம்பிக்கையோடு வரலாம்!

உங்கள் கருத்துக்களை பகிர :
வணிகம் :

விகடன் பிரசுரம் :