லைட்டா பொறாமைப்படும் கலைஞன்

ஆசிரியர்: இசை

Category கட்டுரைகள்
Publication காலச்சுவடு பதிப்பகம்
FormatPaper Pack
Pages 112
ISBN978-93-84641-30-6
Weight150 grams
₹100.00 ₹97.00    You Save ₹3
(3% OFF)
Only 1 copy left! Delivery in 4-7 Days
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866
புத்தகத்தின் மேம்பட்ட உள்பக்கம் பார்க்க Click Here



பேசாப் பொருளைப் பேசத் துணிவதும், புதிய மொழியில் சொல்ல முனைவதுமே கவிஞர் இசையின் தனித்துவம். அதே கல்யாண குணங்களைப் பேணியுள்ள அவரது உரைநடையும் பிறிதொன்றைக் காண்பதில் பிழையொன்றுமில்லாத புதுமையைக் கொண்டவை. பாரதியின் கவிதைகளில் சத்தியத்தைக் காணும் அதே கண்கள்தான் குத்துப்பாட்டுகளோடு ஆட்டமும் போடுகிறது. தமிழ்க் கவிதைகளைப் பற்றி அக்கறையுடன் பேசும் அதே சொற்கள்தான் வடிவேலுவின் வசனங்களையும் , மணியன்பிள்ளையின் சாகசங்களையும் சிறப்பித்துப் பேசுகின்றன. பொதுப்புத்தியி லிருந்து விலகி தனக்கான ஒற்றையடிப் பாதையில் முதலடி வைக்கும் பித்துமனத்தின் தத்தளிப்புகளே இக்கட்டுரைகளுக்கு உரமேற்றியுள்ளன. இசையின் மொழிதலில் முந்திக்கொண்டு நிற்கிற எள்ளலும் கேலியும் தாங்கவொணா துக்கத்தின், விழுங்க முடியா கசப்பின், உச்சகட்ட வெறுப்பின் திரிபுகளேயன்றி வேறல்ல. வெறுமனே சிரிப்பு மூட்டுவதல்ல அவற்றின் உத்தேசம். எதிர்மறை இருளில் திளைப்பது போன்று தோற்றம் தரும் இக்கட்டுரைகள் உண்மையில் உத்தேசிப்பது ஆழத்தில் மங்கித் தென்படும் ஒளியையே. இசையின் இடித்துரைத்தல்கள், தலைகனத்த புலமையின் விமர்சனங்கள் அல்ல. கரிசனையும் அக்கறையும்கூடிய உரையாடல்களே.

உங்கள் கருத்துக்களை பகிர :
இசை :

கட்டுரைகள் :

காலச்சுவடு பதிப்பகம் :