லெனினும் ரஷ்யப் புரட்சியும்

ஆசிரியர்: கிறிஸ்டோபர் ஹில்

Category கம்யூனிசம்
Publication அலைகள் வெளியீட்டகம்
FormatPaperback
Pages 128
Weight200 grams
₹100.00 ₹97.00    You Save ₹3
(3% OFF)
Only 1 copy left! Delivery in 4-7 Days
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866



நான் காரைக்குடி அழகப்பா கல்லூரியில் படித்த பொழுது (1950-1952) அரசியல் உணர்ச்சி பெற்றேன். உள்நாட்டிலும் வெளி நாட்டிலும் உள்ள அரசியல் நிலைமைகளைப் பற்றி சிந்தித்தேன். ரஜனி பாமி தத் எழுதிய இன்றைய இந்தியா' என்ற நூல் எனக்கு அரசியல் பொருளாதாரப் பார்வையைக் கொடுத்தது. ஜான் ரீடு எழுதிய 'உலதைக் குலுக்கிய பத்து நாள்கள்' என்ற நூல் சோஷலிஸ்ட் புரட்சியையும் அதன் மாபெரும் தலைவர்களையும் எனக்கு அறிமுகப்படுத்தியது. 1967இல் ஜனசக்தி வெளியிட்ட அக்டோபர் புரட்சியின் 50ஆம் ஆண்டு விழா மலரில் ஜான் ரீடைப் பற்றி நான் விரிவான கட்டுரையை எழுதினேன்.
இராமநாதபுரம் மாவட்ட விவசாயிகள் சங்கச் செயலாளராக இருந்த தோழர் எம். ஆதிமூலம் அந்தக் கட்டுரையைப் படித்துவிட்டு என்னைப் பாராட்டினார். அந்தப் புத்தகத்திலிருந்து முக்கியமான சில பகுதிகளை மொழிபெயர்த்துச் சொல்லுமாறு என்னிடம் கேட்டுக் கொண்டார். சில வாரங்கள் நான் அவருக்கு வகுப்பு நடத்தினேன். அப்பொழுது இந்தப் புத்தகம் என் மனதில் மிகவும் ஆழமாகப் பதிந்தது. அதற்குப் பத்து ஆண்டுகளுக்குப் பிறகுதான் ஜான் ரீடின் புத்தகத்தை முன்னேற்றப் பதிப்பகம் மொழிபெயர்த்து வெளியிட்டது.
நான் 1980 செப்டம்பரில் முன்னேற்றப் பதிப்பகத்தின் தமிழ்ப் பிரிவில் மொழிபெயர்ப்பாளராக சேர்ந்து எட்டு ஆண்டுகள் பணியாற்றினேன். மாஸ்கோவில் வசித்த எட்டு ஆண்டுகளும் எனக்கு மறக்க முடியாதவை. சோஷலிசப் புரட்சியின் மகத்தான சாதனை களை நேரில் கண்டேன், மக்கள் சிறப்பான வாழ்க்கைத் தரத்தை அனுபவித்தார்கள். சில குறைகள் இருந்தன. எனினும் சோவியத் அமைப்பு விரைவில் வீழ்ச்சி அடையும் என்று கருதவில்லை. அமெரிக்காவின் சதித்திட்டம் வெற்றி பெற்றது.

உங்கள் கருத்துக்களை பகிர :
கம்யூனிசம் :

அலைகள் வெளியீட்டகம் :