லெனினுக்கு மரணமில்லை

ஆசிரியர்: பூ.சோமசுந்தரம்

Category அரசியல்
Publication அலைகள் வெளியீட்டகம்
FormatPaper Pack
Pages 288
First EditionJan 2003
1st EditionJan 2012
ISBN978-93-92213-07-6
Weight350 grams
Dimensions (H) 22 x (W) 15 x (D) 2 cms
₹160.00 $7    You Save ₹8
(5% OFF)
Only 1 copy left! Delivery in 4-7 Days
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866இது நடந்தது ஆயிரத்துத் தொள்ளாயிரத்து இருபதுகளில். அப்போது நான் பிரியஸ்லாவ்ஸ் வட்டத்தைச் சேர்ந்த சிறு கிராமம் ஒன்றில் பள்ளி ஆசிரியையாகப் பணியாற்றி வந்தேன். அருகே ஷாஹா என்னும் அமைதியான சிற்றாறு ஓடிக் கொண்டிருந்தது. அதன் உயர்ந்த கரைமேல் அமைந்திருந்தது கோர்க்கி கிராமம். கான்ஷின் என்னும் தொழிலதிபருடைய சிறு பங்களா இங்கே இருந்தது. "மக்களின் நண்பர்கள்'' என்பவர்கள் பார், சமூக ஜனநாயக வாதிகளுக்கு எதிராக அவர்கள் எவ்வாறு போரிடுகிறார்கள் என்னும் லெனினுடைய நூல் 1894ஆம் ஆண்டு இங்கேதான் சட்ட விரோதமாக அச்சிடப்பட்டது....
இந்த விவரத்தை எனக்குத் தெரிவித்தவர் நெடுங்காலமாக இவ்வூரில் வசித்து வந்த ஒரு பள்ளி ஆசிரியர். 1894ஆம் ஆண்டு, தமது இருபத்து நான்காவது வயதில் கோர்க்கிக்கு வந்த லெனினை அவர் பார்த்தாராம்: "இப்போது உன்னைப் பார்க்கி றேனே, இதே போல'' என்பார்.
''இதோ இங்கே பிர்ச் மரப் பாதையில் நாங்கள் உலாவி னோம். இதோ இந்தப் பெஞ்சியில் லெனின் தம் தோழர், மாணவர் கான்ஷினுடன் உட்கார்ந்தார். கான்ஷின்தாம் புத்தகத்தை அச்சிடும் வேலையை மேற்பார்த்தார்'' என்று ஒவ்வோர் இடமாகக் காட்டினார் ஆசிரியர்.

உங்கள் கருத்துக்களை பகிர :
பூ.சோமசுந்தரம் :

அரசியல் :

அலைகள் வெளியீட்டகம் :