லக்கான் (பின்நவீன சிந்தனையாளர் வரிசை)

ஆசிரியர்: எம்.ஜி.சுரேஷ்

Category கவிதைகள்
Publication அடையாளம் பதிப்பகம்
FormatPaperback
Pages 64
ISBN978-81-7720-083-6
Weight50 grams
₹60.00      
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866



லக்கான் இந்த நூற்றாண்டின் ஆற்றல் மிக்க சிந்தனையாளர்களில் ஒருவர், உளவியல் தந்தை என்று அறியப்படும் ஸிக்மண்ட் ஃபிராய்டை மறுவாசிப்புக்கு உட்படுத்தியவர். என்னுடைய சிந்தனை என்னுள் இல்லை, எனக்கு வெளியே இருக்கிறது' என்று கூறி அனைவரையும் திடுக்கிட வைத்தவர். ஃபிராய்டியப் பள்ளி என்ற சொல்லாடலைப் போலவே லக்கானியப் பள்ளி என்ற சொல்லாடலை உருவாக்கியவர்.லக்கானைப் பற்றிய ஒரு சிறு அறிமுக நூலாக இதை எம்.ஜி, சுரேஷ் எழுதியிருக்கிறார். இச்சிறுநூல் லக்கானின் வாழ்க்கை வரலாறு, அவரது முக்கியக் கோட்பாடுகளான "கண்ணாடிக்கட்டம்', 'உளவியல் பகுப்பாய்வில் அமைப்பியல் மற்றும் பின்அமைப்பியல் வகிக்கும் பாத்திரம்' ஃபிராய்டின் கருத்தான 'இட்-ஈகோ-சூப்பர் ஈகோ' என்ற படிநிலை அமைப்புக்கு மாற்றாக லக்கான் முன்வைத்த 'படிமம்-குறியீடு-உண்மை ' ஆகிய விஷயங்கள் குறித்துப் பேசுகிறது. லக்கானின் கருத்துகளுக்கு 5 திர்வினையாக எழுந்த மாற்றுக் கருத்துகள் பற்றியும் பரிசீலிக்கிறது.

உங்கள் கருத்துக்களை பகிர :
எம்.ஜி.சுரேஷ் :

கவிதைகள் :

அடையாளம் பதிப்பகம் :