ரோஸ்
ஆசிரியர்:
ஆயிஷா இரா.நடராசன்
விலை ரூ.60
https://marinabooks.com/detailed/%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%B8%E0%AF%8D?id=2+4509
{2 4509 [{புத்தகம் பற்றி ஆயிஷாவைப் போல மனதை உலுக்கும் இன்னொரு கதை. கதை என்று கூடச் சொல்ல முடியாது.ஒரு வாழ்க்கைச் சித்திரம்.’ஒரு’ என்கிற அடைமொழி கூடச் சரியில்லை. நம் அன்றாட வாழ்வின் ஒரு பக்கம் அப்படியே நம் கண்முன் ரீவைண்ட் ஆகி நம் குழந்தைகளின்பால் நாம் செலுத்தும் வன்முறையை நம் உள்ளம் அதிர உணரச் செய்கிறது. ஒரு மௌனப்படம் போல நம்மை அழுத்தும் இக்கதையில் சம்பவங்களோ விவரணைகளோ எதுவுமே இல்லாமல் பேசும் வசனங்களால் மட்டுமே கதையை நகர்த்திச் செல்லும் உத்தி வலுவாகப் பயன்பட்டுள்ளது. ஒரு பெண்ணை லாட்ஜுக்கு அழைத¢துச்செல்லும் ஒரு கதையில் பூமணி இந்த உத்தியைப் பயன்படுத்தி எழுதியிருப்பார். அதற்குப் பிறகு இவ்வளவு வலுவுடன் இந்த உத்தி இக்கதையில்தான் பயன்படுத்தப்பட்டுள்ளது. ஒவ்வொரு நடுத்தர வர்க்கத்து வீட்டிலும் வேலைக்குச் செல்லும் பெற்றோரும் பள்ளி ஆசிரியர்களும் ஒவ்வொருவரும் தினசரி இரவு படுக்கைக்-குச் செல்லுமுன் ஒரு முறை இப்புத்தகத்தை வாசித்துத் தங்கள் மனசாட்சியுடன் பேச¤க்கொள்ள வேண்டும். இதற்கு மேல் விளக்கம் தேவையில்லை. புத்தகத்தை வாங்கிவிடுவோம்.}]}
-----------------------
www.marinabooks.com
80,000+ தமிழ்ப் புத்தகங்கள் !!!
10,000+ எழுத்தாளர்கள் !!!
1,000+ பதிப்பகங்கள் !!!
Call / SMS / WhatsApp 88834 88866