ரேடியம் கண்ட மேரிக்யூரி

ஆசிரியர்: க. சாந்தகுமாரி

Category வரலாறு
Publication கௌரா பதிப்பக குழுமம்
Format Paperback
Pages 96
Weight100 grams
₹70.00       Only 1 copy left! Delivery in 4-7 Days
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866மேரி க்யூரி தம்பதியர் ரேடியம் கண்டுபிடித்த பின்னர் கதிரியக்கம் பற்றி விபரங்கள் பெற வேண்டி பல விஞ்ஞானிகள், குறிப்பாக இங்கிலாந்து, ஜெர்மனி, டென்மார்க், ஆஸ்திரியா ஆகிய இடங்களிலிருந்தெல்லாம் அவர்களிடம் கேட்ட வண்ணம் இருந்தார்கள். D மேரியும் பியர் க்யூரியும் தங்களுக்குத் தெரிந்த தகவல்களைக் கொடுத்த வண்ணம் இருந்தார்கள். மேலும் தமது அனுபவத்தின் அடிப்படையில் தாம் கஷ்டப்பட்டுக் கண்டுபிடித்ததைவிடவும் தமக்குத் தோன்றிய எளிய வழிமுறைகளை - தமது அனுபவத்தால் கிடைத்தவைகளை அனுப்பிக் கொண்டிருந்தனர்.
இவ்விதமாக க்யூரி தம்பதியினர் ரேடியம் கண்டுபிடித்ததைத் தொடர்ந்து, கதிரியக்கத்தைக் கொண்ட வேறு தனிமங்களைக் கண்டு பிடிக்கும் முயற்சியில் தீவிரமாக இறங்கி வெற்றியும் பெற்றனர். இவ்விதமாக மெஸோ தோரியம், ரேடியோ தோரியம், ஐயோனியம், ப்ரோடாக்டினியம் போன்றவை கண்டுபிடிக்கப்பட்டன.
ரேடியத்துக்கு மனதைக் கவரும் ஒளியுண்டு நிறமும் உண்டு என்பதை மேரியும் க்யூரியும் கண்டுகளித்தார்கள். ரேடியத்தைக் கண்டுபிடித்த இந்தத் தம்பதி, 1902-ஆம் ஆண்டு தக்க சான்றுகளுடன் தெரிவித்த பின்னர் விஞ்ஞானிகள் ரேடியத்தின் சிறப்பைப் பற்றித் தெரிந்து கொண்டார்கள், தாங்கள் தங்கள் கண்களால் கண்டு மகிழ்ச்சியும் வியப்பும் அடைந்தார்கள்.

உங்கள் கருத்துக்களை பகிர :
க. சாந்தகுமாரி :

வரலாறு :

கௌரா பதிப்பக குழுமம் :