ருத்ரவீணை பாகம்-2

ஆசிரியர்: இந்திரா சௌந்தர்ராஜன்

Category இல்லற இன்பம்
Publication விசா பப்ளிகேசன்ஸ்
FormatPaperback
Pages 472
First EditionMay 2009
7th EditionJan 2019
Weight550 grams
Dimensions (H) 26 x (W) 15 x (D) 1 cms
₹340.00 $14.75    You Save ₹17
(5% OFF)
Delivery in 4-7 Days
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866தோடிபுரம் வயல்வெளியில் நாற்று நடும் பணி ஒரு புறமும், களை எடுப்பது ஒரு புறமுமாக விவசாயப் பணிகள் மும்முரத்தில் இருக்கும்போது அந்த வயல்வெளியிலும் மெல்லிய அளவில் ஒரு வீணை இசை அவர்கள் காதை வருட ஆரம்பித்தது.
எங்கிருந்து வருகிறது... எப்படி வருகிறது.... யார் வாசிக்கி றார்கள் என்பதுகூடத் தெரியாதவர்களாய் வயல்வெளியில் சேற்றுக்கால்களோடு நான்கு பக்கமும் பார்த்தனர்.
அற்புதமான ராகம்... அது அமிர்தவர்ஷினி என்பது அவர்களுக்குத் தெரிய வாய்ப்பில்லை. அதன் எதிரொலியோ, இல்லை தற்செயலாகவோ வானின் வடகிழக்கு மூலையில் மழை மேகக்கூட்டம் தெரிந்தது. அதுவும் திருவாரூர் தேர் திகுதிகு வென இழுக்கப்பட்டு வருகிறாற்போல வந்தபடி இருந்தது.சிறிது நேரத்திலேயே அடித்துப் பெய்ய ஆரம்பித்துவிட்டது மழை.

உங்கள் கருத்துக்களை பகிர :
இந்திரா சௌந்தர்ராஜன் :

இல்லற இன்பம் :

விசா பப்ளிகேசன்ஸ் :