ரிபு கீதை

ஆசிரியர்: அழகர் நம்பி

Category ஆன்மிகம்
Publication ஸ்ரீ இந்து பப்ளிகேஷன்ஸ்
FormatPaperback
Pages 344
Weight400 grams
₹200.00      
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866



ரிபு, படைப்புக்கடவுளான பரமசிவனிடமிருந்து ஞானம் பெற்றவர். தாம் பெற்ற உபதேச சாரமாகவே ரிபு கீதயை அவர் இயற்றினார். ரிபு கீதை ஸ்ரீ சிவ ரகஸ்யம் என்கிற புராணத்தின் ஆறாவது காண்டம் ஆகும். ரிபு தம்முடைய சிறு வயதிலேயே தம் பிறப்பிடத்தை விட்டு சிவனார் உறையும் கயிலை மலையையே புகலாய்க் கொண்டார். தம்மீது ஏகாக்ர சிந்தையுடன் முனிவர் செலுத்திய பக்தி சிவனை மகிழச் செய்தது. அவர் மகாதிருப்தியுடன் ஆத்ம ஞானத்தை இவருக்கு வழங்கினார். தம்முடைய குருவிடம் தமக்கிருந்த நன்றியுணர்வால் ரிபு அவரைத் துதிக்கலானார். தாம் பெற்ற நற்பேற்றினை ஆன்மசாதகனான நிதாகர் உட்பட தமது சீடர்களுக்கு அருளினார்.புரிந்து கொள்வதற்கு அரிதான மறை பொருளை உள்ளடக்கிய ரிபுவின் துதிகள் உண்மையை அறிவார்ந்த முறையில் புலப்படுத்துபவை. எத்தனை முறை படித்தாலும் ரிபு கீதை ஒரே முடிவையே நமக்கு உணர்த்தி நிற்கும். அது * அனைத்தும் சிவன், அனைத்தும் பிரம்மனே ' என்பதாகும்.

உங்கள் கருத்துக்களை பகிர :
அழகர் நம்பி :

ஆன்மிகம் :

ஸ்ரீ இந்து பப்ளிகேஷன்ஸ் :