ரிபுகீதை

ஆசிரியர்: தமிழாக்கம்:ஸ்ரீ உலகநாத ஸ்வாமி

Category ஆன்மிகம்
Publication ஸ்ரீரமணாச்ரமம்
FormatPaperback
Pages 532
ISBN978-81-88225-58-3
Weight550 grams
₹140.00 ₹126.00    You Save ₹14
(10% OFF)
Only 2 copies left! Delivery in 4-7 Days
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866பகவான் ஸ்ரீ ரமண மஹரிஷிகள் தம்மடியார் பொருட்டுப் பல சாஸ்திர நூல்களையும் ஸ்தோத்ர நூல்களையும் அருளியுள்ளார். முன்னைப் பெரியோர் பலர் அருளிச் செய்துள்ள ரிபுகீதை, கைவல்ய நவநீதம், ஞான வாசிட்டம் போன்ற நூல்களைத் தம் அடியார்களின் ஐயம் களைய மேற்கோள்களாகக் கையாண்டுள்ளார். இவற்றுள் ஸ்ரீ பகவான் பரிந்துரைத்து, அவர் சந்நிதியில் அடிக்கடி பாராயணம் செய்யப்பட்ட தனிச்சிறப்பைப் பெற்ற நூல் “ரிபுகீதை'.
இந்நூல் கைலாயத்தில் பரமசிவனால் ரிபு முனிவ ருக்கும் பின்னர் ரிபு முனிவரால் கேதாரஸ்தலத்தில் நிதாகர் முதலியோருக்கும் உபதேசிக்கப்பட்டது. ஐம்பது அத்தியாயங்களில் 2493 ஸ்லோகங்களைக் கொண்ட வடமொழி மூலத்தை, உலகநாத ஸ்வாமிகள் என்னும் துறவுநாமம் பூண்ட திருவிடைமருதூர் பிரம்மஸ்ரீ பிக்ஷசாஸ்திரிகள் தமிழில் 44 அத்தியாயங்களில் 1924 விருத்தப்பாக்களாக ஆக்கியுள்ளார். பல அடியார்களுக்கு இந்நூலைப் பாராயணம் செய்யுமாறு உபதேசித்தும், சில பாடல்களைத் தாமே தேர்ந்தெடுத்து பாராயணம் செய்யவும் ஸ்ரீ பகவான் பக்தர்களை ஊக்குவித்திருக்கிறார். சம்பூர்ணம்மாள், தனக்குப் பாடல்களின் பொருள் விளங்கவில்லை என்று சொல்ல, ஸ்ரீ பகவான் 'பொருள் புரியாவிட்டாலும் பாராயணம் செய்வதால் மிகுந்த பலன் உண்டு' என்று பதிலிறுத்தார்.

உங்கள் கருத்துக்களை பகிர :
தமிழாக்கம்:ஸ்ரீ உலகநாத ஸ்வாமி :

ஆன்மிகம் :

ஸ்ரீரமணாச்ரமம் :