ராமாயணம்
ஆசிரியர்:
ராஜாஜி
விலை ரூ.235
https://marinabooks.com/detailed/%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D?id=1129-5450-6369-1289
{1129-5450-6369-1289 [{புத்தகம் பற்றி தலைமுறை தலைமுறையாக நம் மக்கள் படித்தும், கேட்டும், அனுபவித்தும் மனத் தூய்மை பெற்று வந்த பேரிதிகாசம் இராமாயணம். 'அநீதி, அக்கிரமம், கொடுமை ஆகியவற்றையொழித்து, அறமும், நலமும், இன்பமும் பெருக ஆண்டவன் அருள் பாலிப்பான்' என்ற தத்துவ உண்மையை இது விளக்குகிறது.
<br/> பண்புகள் மேலோங்கிய இக்காவியத்தின் குணச்சித்தரப் பாத்திரங்கள், நம்மைத் தீய நெறியினின்றும் விலக்கி, நாம் சீரும் சிறப்புமிக்க வாழ்வைப் பெற வழிகாட்டிகளாக உள்ளன. எனவேதான் இக்காவியம் நமது பழமைச் செல்வமாகவும், பண்பாட்டின் களஞ்சியமாகவும், நெறி காட்டும் கலங்கரை விளக்காகவும் ஆன்றோரால் போற்றப் பட்டு வந்தது. கால முகில்களை விலக்கி, தண்ணொளி பரப்பும் வெண்மதியாக இந்நூல் விளங்குகின்றது.
<br/> நமது மதிப்பிற்குரிய பெருந்தலைவர், நம் நாட்டுப் பண்பாடுகளில் முற்றும் தோய்ந்த ஞான அருளாளர் ராஜாஜி அவர்கள், இந்நூலைச் சாதாரண மக்களும்பெண்களும் சிறுவர்களுங்கூடப் படித்துப் பயன்பெறத் தக்க முறையில் எளிய இனிய வாசகத்தமிழில் வழங்கியுள்ளார்கள். இந்நூலின் பயனைப்பற்றிக் குறிப்பிடும்போது மேதகு ராஜாஜி அவர்கள், "கங்கையும் காவேரியும் ஓடும்வரையில் சீதா-ராமசரிதம் பாரத நாட்டின் ஆண் பெண் குழந்தைகளனைவரையும் தாய்போல் பக்கத்திலிருந்து காக்கும்." என்று கூறியுள்ளார்கள்.
<br/>}]}
-----------------------
www.marinabooks.com
80,000+ தமிழ்ப் புத்தகங்கள் !!!
10,000+ எழுத்தாளர்கள் !!!
1,000+ பதிப்பகங்கள் !!!
Call / SMS / WhatsApp 88834 88866