ராஜீவ் படுகொலை: தூக்குக் கயிற்றில் நிஜம்

ஆசிரியர்: திருச்சி வேலுசாமி

Category அரசியல்
Publication பேட்ரிஷியா பதிப்பகம்
FormatPaperback
Pages 256
First EditionNov 2012
4th EditionDec 2014
Weight300 grams
Dimensions (H) 22 x (W) 15 x (D) 2 cms
$10.75      

தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866
புத்தகத்தின் மேம்பட்ட உள்பக்கம் பார்க்க Click Here

உலகம் உண்மையை அறிந்துகொள்ள வேண்டும் என்ற ஒரே நோக்கத்துடன் செயல்பட்ட விதத்தை நூல் நெடுகிலும் திருச்சி வேலுசாமி விவரிக்கிறார். யாருக்கும் அஞ்சாமல் யாருக்கும் விலை போகாமல் அவர் ஆற்றிய பணி பாராட்டுக்குரியது. வேலுசாமி விடுத்த அடுக்கடுக்கான கேள்விகளுக்கு விடை இன்னமும் கிடைத்தபாடில்லை.இராஜீவ் காந்தியின் கொலை பற்றியும், அதன் பின்னுள்ள அரசியலைப் பற்றியும், சதியைப் பற்றியும் பேசுவதற்கே. பலரும் அஞ்சிய காலகட்டத்தில், சந்தேகத்திற்குரிய நபர்களின் முகங்களை தமிழ்நாட்டின் மக்கள் மன்றத்தில் அண்ணன் திருச்சி வேலுசாமி தோலுரித்துக்காட்டியுள்ளார்.
ராஜீவ் படுகொலையில் பல உண்மைகள் மறைக்கப் பட்டுள்ளன. இந்தக் கொலையின் பின்னணியில் இருந்த சதிகாரர்கள் இன்னமும் நாட்டில் சுதந்திரமாக நடமாடிக்கொண்டிருக்கிறார்கள். நீதி, நேர்மை, உண்மை ஆகியவை முற்றிலுமாக மறைக்கப் பட்டுவிட்டன. ராஜீவ் கொலை வழக்கு புலன்விசார ணையில் தொடங்கி வழக்கு நடத்தப்பட்ட விதமும் தீர்ப்பு அளிக்கப்பட்ட வரையிலும் பல உண்மைகள் ஆழக்குழித்தோண்டி புதைக்கப்பட்டுள்ளன. தேசத் தந்தை மகாத்மா காந்தி அவர்களின் கொலை வழக்கு விசாரணையும் முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி கொலைவழக்கு விசாரணையும் பகிரங்க மாகத்தான் நடத்தப்பட்டன. ஆனால், ராஜீவ் கொலை வழக்கு விசாரணை தடா நீதிமன்றத்தில் நடத்தப் பட்டபோது இரகசியமாக நடத்தப்பட்டது.

உங்கள் கருத்துக்களை பகிர :