ராஜீவ் காந்தி படுகொலை: சிவராசன் டாப் சீக்ரெட்

ஆசிரியர்: பா. ஏகலைவன்

Category கட்டுரைகள்
Publication யாழ் பதிப்பகம்
FormatPaperback
Pages 480
First EditionJan 2018
Weight550 grams
Dimensions (H) 22 x (W) 15 x (D) 4 cms
₹500.00 $21.5    You Save ₹25
(5% OFF)
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866
புத்தகத்தின் மேம்பட்ட உள்பக்கம் பார்க்க Click Hereராஜீவ் காந்தியின் படுகொலையில்
தொடர்புள்ள உண்மையான குற்றவாளிகளையும் பின்னணியில் இருந்து செயல்பட்டவர்களையும் கண்டறிந்து குற்றவாளிக்கூண்டில் நிறுத்துவதற்குப் பதில் இந்த வழக்கின் புலனாய்வில் நீதி, நேர்மை, உண்மை ஆகியவை முற்றிலுமாக மறைக்கப்பட்டன. புலன் விசாரணையில் தொடங்கி வழக்கு நடத்தப்பட்ட விதம், தடா நீதிமன்றத்தில் தீர்ப்பு அளிக்கப்பட்ட விதம் ஆகியவற்றில் பல உண்மைகள் ஆழக் குழிதோண்டிப் புதைக்கப்பட்டன.


இந்நூல் புதிய தீர்ப்புகளை அளிக்கும்!
(ராஜீவ் காந்தியின் படுகொலையில்
தாடர்புள்ள உண்மயன குற்றவாளிகளையும் பின்னணியில் இருந்து செயல்பட்டவர்களையும் கண்டறிந்து குற்றவாளிக் கூண்டில் நிறுத்துவதற்குப் பதில் இந்த வழக்கின் புலனாய்வில் நீதி, நேர்மை, உண்மை ஆகியவை முற்றிலுமாக மறைக்கப்பட்டன. புலன் விசாரணையில் தொடங்கி வழக்கு நடத்தப்பட்ட விதம், தடா நீதிமன்றத்தில் தீர்ப்பு அளிக்கப்பட்ட விதம் ஆகியவற்றில் பல உண்மைகள் ஆழக் குழிதோண்டிப் புதைக்கப்பட்டன.
இந்த வழக்கில் தமிழ்நாட்டுத் தமிழர்கள் 13 பேர்கள் ஈழத் தமிழர்கள் 13 பேர்கள் என சரிசமமான எண்ணிக்கையில் மொத்தம் 26 தமிழர்கள் குற்றவாளிக்கூண்டில் நிறுத்தப்பட்டது ஏதோ தற் ெச ய ல் அ ல் ல . ஆழ ம ா ன உள்நோக்கத்துடன் செய்யப்பட்டது.தமிழீழத்தில் நடைபெற்றுவரும் விடுதலைப் போராட்டத்தின் தாக்கம் தமிழகத்தில் பரவவிடாமல் தடுக்கவும், தமிழ்த்தேசிய உணர்வைச் சிதைப்பதற்காகவும் திட்டமிட்டு இவ்வாறு செய்யப்பட்டது.

ஒருவர் முதற்கைச் செய்திகளாகப் பதிவு செய்திருப்பது என்ற வகையில் இதுதான் முதல் நூல், வேறு யாருக்காவது இந்த வாய்ப்பு அமைந்ததா? அமைந்தாலும் இப்படிப்பதிவு செய்ய முடிந்ததா? தெரியாது. தமிழகத்திலிருந்து ஈழம் சென்று புலிகள் இயக்கத்தில் சேர்வது எளிதன்று, அப்படிச் சேர்ந்து களமாடி அந்த அனுபவத்தை நம்மோடு பகிர்ந்து கொள்ள இரவி ! இன்றும் நம்மோடிருப்பது ஒரு வேளை சிறை தந்த கோடையாகவும் இருக்கலாம்.
விடுதலை வேட்கை கொண்டு யாவும் துறந்து வெளியேறிய அனுபவம் எனக்கும் உண்டு. ஆனால் இரவி இன்னும் சிறு வயதில் வீடு துறந்து கடல் கடந்து காடு அடைந்து புலிப் படையில் வாழ்வைக் ரைத்துக் கொண்டு, களமாடி, கால்நூற்றாண்டுக்கு மேல் சிறையில் இன்னலுற்ற பிறகும் அதே துடிப்போடு நமக்குப் பாடம் சொல்கிறார் என்றால் அவரை வணங்குவதற்கு நண்பர் ஏகலைவன் தந்திருக்கும் இந்த வாய்ப்புக்காக மகிழ்கிறேன், சிவபாலன், குட்டியக்கா, குமார் தொடங்கி ஈழத்து மனிதர்களின் ஈரத்தையும் நாம் போற்றி வணங்கும் கரும்புலி மில்லர் வரையிலான மாவீரர்களின் வீரத்தையும் தொட்டுணர்ந்து பட்டறிந்து சொல்லும் வாய்ப்பு அரிது! அதை எழுத்தில் வடிக்கும் திறன் அரிதிலும் அரிது!

உங்கள் கருத்துக்களை பகிர :
கட்டுரைகள் :