ராஜிவ் கொலை வழக்கு

ஆசிரியர்: K.ரகோத்தமன்

Category சட்டம்
Publication கிழக்கு பதிப்பகம்
FormatPaperback
Pages 232
ISBN978-81-8493-311-6
Weight300 grams
₹295.00 ₹286.15    You Save ₹8
(3% OFF)
Delivery in 4-7 Days
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866



இதைவிட முழுமையான ஆதாரபூர்வமான ஒரு கொலைவழக்கு விசாரணை நூல் இதற்கு முன் தமிழில் வெளிவந்ததில்லை. இந்திய சரித்திரத்தில் மட்டுமல்ல உலக சரித்திரத்திலும்கூட ராஜிவ் கொலை வழக்குக்கு இணையான இன்னொரு வழக்கு இல்லை . வழக்கின் ஆரம்பப்புள்ளி முதல் முடிவு வரையிலான நேர்மையான அலசல். முழுமையான பின்னணித் தகவல்கள், ஆதாரங்களுடன் கூடிய விசாரணை விவரங்கள். வழக்கின் தலைமை புலனாய்வு அதிகாரி கே. ரகோத்தமனின் இந்நூலை, ராஜிவ் கொலை வழக்கு பற்றிய ஆதாரபூர்வமான முதன்மை ஆவணமாகக் கொள்ளலாம். சதித்திட்டம் குறித்த விசாரணைகள் எவ்வாறு மேற்கொள்ளப்பட்டன? புலன் விசாரணை செய்த அதிகாரிகள் சந்தித்த சிக்கல்கள், சவால்கள் என்னென்ன? யாரால், ஏன் அவை தோற்று விக்கப்பட்டன? இந்திய உளவு நிறுவனங்களின் நிகரற்ற மெத்தனப் போக்கின் பின் உள்ள அரசியல் என்ன? விடுதலைப் புலிகளுக்கும் இந்திய அரசியல் பெரும்புள்ளி களுக்கும் இடையிலான நுட்பமான தொடர்புகள் குறித்த செய்திகள் அதிர்ச்சியளிக்கின்றன. அதைவிட அதிர்ச்சிகரமானது, புலிகளோடு நெருங்கிய தொடர்புடைய சிலர் இறுதி வரை சரியாக விசாரிக்கப்படாதது.
நூலாசிரியர் ரகோத்தமன் சி.பி.ஐ.யில் முப்பத்து ஆறு ஆண்டுகால அனுபவம் பெற்றவர். முன்னதாக, லஞ்ச ஊழல் வழக்குகள், நிதி மோசடி வழக்குகள் உள்ளிட்ட பொருளாதாரக் குற்றப் புலனாய்வுகளில் கவனம் செலுத்தியிருக்கிறார். ராஜிவ் கொலை வழக்கின் தலைமை புலனாய்வு அதிகாரியாகப் பணியாற்றியவர்.

உங்கள் கருத்துக்களை பகிர :
சட்டம் :

கிழக்கு பதிப்பகம் :