ராசாத்தி ஒருத்தி

ஆசிரியர்: மனோபாரதி

Category கவிதைகள்
Publication காகிதம் பதிப்பகம்
FormatPaperback
Pages 72
First EditionFeb 2016
Weight100 grams
Dimensions (H) 21 x (W) 14 x (D) 1 cms
$2.25       Delivery in 1-2 Days

தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866
புத்தகத்தின் மேம்பட்ட உள்பக்கம் பார்க்க Click Here

இந்நூலை, உண்மைக் காதலர்கள் அத்தனைப் பேருக்கும் சமர்ப்பிக்கிறேன்.,, கொஞ்சம் புது வித முயற்சியாக "இரட்டைப்.புத்தகம்_Dual.Book" ஆக இந்நூலை வெளியிடுகிறேன்... அதாவது,கையில் நேராக வைத்து ஒரு நூலும், தலைகீழாக வைத்து ஒரு நூலும் படிக்கலாம்... தமிழில் இது போன்று ஒரு நூல் வெளிவந்ததில்லை என்று என்னளவில் அறிகிறேன்... அவ்வகையில், இந்நூலுக்கு ராசாத்தி_ஒருத்தி ஆகிய இரு தலைப்புகளை நான் சூட்டியுள்ளேன்... இந்நூல் முழுவதும் காதல் சார்ந்த வரிகளே நிரம்பியிருக்கும்... மகிழ்ச்சியும் துயரமும் கலந்ததே காதல் என்பதை சொல்லாமல் சொல்லவே, இந்நூலின் அட்டைப்படத்தை கருப்பு_வெள்ளை நிறத்தில் வடிவமைத்துள்ளேன்... காதலிக்காதவனுக்கு காதல் என்ன என்று சொல்லித் தரும் இந்நூல்... காதலிப்பவனுக்கு காதலின் வலிகளைச் சொல்லித் தரும் இந்நூல்... காதலில் தோற்றவனுக்கு ஆறுதலை அள்ளித் தரும் இந்நூல்... வலிகளின் வரிகள் இருக்கும் இந்நூலில்... சாதியைச் சாடும் வரிகள் இருக்கும் இந்நூலில்... துரோகத்தைக் கண்டிக்கும் சொற்கள் இருக்கும் இந்நூலில்... கண்ணீர்க் கனங்களை கடக்க வைக்கும் இந்நூல்... மகிழ்ச்சி மழை பொழியும் இந்நூல்... கற்பனைக் கடலில் மிதக்க வைக்கும் இந்நூல்... நினைவுகளின் நிழலில் இளைப்பாற்றும் இந்நூல்... காதலியம், காதல்த்துவம் போன்ற சொற்களைப் பயன்படுத்தியுள்ளேன்... நீள் வரிகள், ஒரு தலைப்பின் கீழ் எழுதிய ஒரு பத்தி, ஒரு தலைப்பின் கீழ் எழுதிய பல பத்திகள், ஒரு தலைப்பின் கீழ் எழுதிய நூற்றுக்கும் மேற்பட்ட பத்திகள் என்று பல விதங்களில் எழுதியுள்ளேன்... நவீனம், நாத்திகம், ஆத்திகம், புரட்சி, அறிவியல், புராணக் காப்பியங்கள், கற்பனைக் கதைகள் சார்ந்த வார்த்தைகளைத் தொடுத்து சில வரிகள் எழுதியுள்ளேன்... இந்நூலைக் கவிதை நூல் என்று என்று சொல்ல மாட்டேன்... இது என் வரிகளால் ஆன காதல் நூல் தான்... நூலின் வகையில் கவிதை என்று குறிப்பிடாமல் “சுயவரிகள்_Self.lines” என்றே குறிப்பிட்டுள்ளேன்... மேலும், என்னை “வரிஞர்.மனோபாரதி_Line.Writer.Manobharathi” என்றே குறிப்பிட்டுள்ளேன்...
- மனோபாரதி

உங்கள் கருத்துக்களை பகிர :