ரயிலேறிய கிராமம்

ஆசிரியர்: எஸ். ராமகிருஷ்ணன்

Category கட்டுரைகள்
Publication தேசாந்திரி பதிப்பகம்
FormatPaper back
Pages 152
ISBN978-93-87484-38-2
Weight250 grams
₹150.00 ₹145.50    You Save ₹4
(3% OFF)
Delivery in 4-7 Days
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866
புத்தகத்தின் மேம்பட்ட உள்பக்கம் பார்க்க Click Here



நிலம் கற்றுத்தரும் பாடம் மகத்தானது, ஒரு போதும் மறக்க முடியாதது. இந்தியாவை ஒருமுறை சுற்றி வந்தவன் அதன்பிறகு வாழ்வின் மீது மிகுந்த பற்றும் நம்பிக்கையும் கொண்டவனாகவே இருப்பான். அலைந்து பாருங்கள் இந்தியா எவ்வளவு பெரியது, வளமையானது, உறுதியானது, என்பது புரியும்.
இந்தியாவில் பிறந்த ஒவ்வொருவரும் ஒருமுறையாவது இந்திய நதிகளை நேரில் பார்த்து வரவேண்டும். அப்போது தான் இந்தியா எவ்வளவு வளமையானது, எவ்வளவு பாரம்பரியமிக்கது என்பது புரியும். இந்தியா நதிகளால் ஒன்றிணைக்கப்பட்ட நாடு. நதியை ஒட்டியே நகரங்கள் இருக்கின்றன. நதியை ஒட்டியே கலைகள், கலாச்சார மாற்றங்கள் நிகழ்ந்திருக்கின்றன. இந்தியாவின் ஆன்மாவைத் தேடும் ஒரு பயணி நதி வழி செல்பவனாகவே இருப்பான்.
காலத்தின் விரல்கள் விநோதமானவை. அவை பொம்மலாட்டக்காரன் பார்த்துக் கொண்டிருக்கும் போதே பொம்மைகளை மாற்றி வேறு காட்சிகளை உருவாக்கிவிடுவது போல, வாழ்வில் மாறவே மாறாது என்று நம்பிக் கொண்டிருந்த காட்சிகள்யாவையும் கண் முன்னே மாற்றிவிடுகின்றன.
எனது பயணத்தின் ஊடாக நான் கண்ட காட்சிகள். பெற்ற அனுபவங்கள், சந்தித்த மனிதர்கள், வியந்த இடங்கள் இவை பற்றிய கட்டுரைகளே ரயிலேறிய கிராமம். இதன் ஊடாகப் பயணத்தையும் வாழ்கை அனுபவத்தையும் முதன்மைப்படுத்திய நூல்களைப் பற்றிய கட்டுரைகளும் இடம்பெற்றுள்ளன.


உங்கள் கருத்துக்களை பகிர :
எஸ். ராமகிருஷ்ணன் :

கட்டுரைகள் :

தேசாந்திரி பதிப்பகம் :