ரத்தம் ஒரே நிறம்

ஆசிரியர்: சுஜாதா

Category நாவல்கள்
Publication விசா பப்ளிகேசன்ஸ்
FormatPaperback
Pages 360
Weight450 grams
₹275.00 ₹255.75    You Save ₹19
(7% OFF)
Delivery in 4-7 Days
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866



குமுதம் என்னை 'சரித்திர நாவல் எழுதிப் பாருங்களேன்' என்று கேட்ட போது சற்றுத் தயங்கினேன். சரித்திர நாவல் எழுதுவதற்கு என்று சில எழுதப்படாத விதிகள் இருக்கின்றனவாம். சரித்திர நாவலில் சரித்திரம் மட்டும் இல்லாமல், சில தீப்பந்தங்களும் உறையூர் ஒற்றர்களும் கட்டாயம் வேண்டும். கரிய கண்களுடைய அழகான ராஜகுமாரிகளை நீண்ட வாக்கியங்களில் வருணிக்க வேண்டும். அடிக்குறிப்புக்கள் தாராளம் வேண்டும். சோழனாக இருந்தால் நல்லது. பாண்டியன் பரவாயில்லை. தமிழ்ச் சாதியின் மேம்பாடு, கடல் கடந்த நாகரிகம், இவைகளைச் சொல்வது உத்தமம். குதிரைகள் தாங்கித் தேர்கள், முத்துக்கள் இறைந்திருக்கும் வீதிகள், யவன வியாபாரிகள், யாழ், இன்னபிறவும் வேண்டும்.
இப்படியெல்லாம் இந்த நாவலில் எதுவும் இல்லை . முதலில் என் தமிழ் நடை சரித்திர நாவலுக்கு ஒவ்வாது என்றுதான் தோன்றியது. அதனால் சமீபத்திய சரித்திரத்தை எடுத்துக்கொண்டால் என்ன என்று தோன்றியது. சிப்பாய்க் கலகத்தைத் தேர்ந்தெடுத்து அதைப் பற்றி படிக்கத் துவங்கினேன். சிப்பாய்க் கலகம் வடக்கே நடந்திருக்கிறது. தக்காணத்தில் அதன் பாதிப்பு அதிகம் இல்லை. இந்திய சர்க்கார் வழவழப்பான காகிதத்தில் சிப்பாய்க் கலகத்தில் செத்துப்போனவர்களின் பெயர்களை எல்லாம் பதிப்பித்திருக் கிறார்கள். அதில் தமிழ்ப் பெயர் ஏதாவது இருக்கிறதா என்று தேடினேன். இல்லை. ஆனால் கர்னல் நீலின் தலைமையில் சென்னையிலிருந்து ராணுவம், பெரும்பாலும் ஆங்கிலோ இந்தியர்களைக் கொண்டு, கலகத்தை அடக்க வடக்கே போயிருக்கிறார்கள் என்கிற செய்தி கிடைத்தது. அவர்களுடன் ஒரு தமிழனை அனுப்பத் தீர்மானித்தேன். ஒரு வெள்ளைக் காரன் மேல் சொந்த வெறுப்பும் வைத்துக்கொண்டு அவனைத் தொடர்ந்து கலகத்தை நோக்கிச் செல்வதாக கதைக்கரு அமைத்துக் கொண்டபோது தமிழன் அங்கே போக எனக்குச் சந்தர்ப்பம் கிடைத்துவிட்டது...

உங்கள் கருத்துக்களை பகிர :
சுஜாதா :

நாவல்கள் :

விசா பப்ளிகேசன்ஸ் :