ரத்த தானம்
₹60.00 ₹54.00 (10% OFF)

ரத்ததானம்

ஆசிரியர்: வைரமுத்து

Category கவிதைகள்
Publication விசா பப்ளிகேசன்ஸ்
FormatPaperBack
Pages 80
Weight150 grams
₹60.00 ₹54.00    You Save ₹6
(10% OFF)
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866



புதுக்கவிதை. உலகின் இலக்கிய வடிவம். ஆகா - எத்தனை இனிமை. எவ்வளவு வலிமை. ஏராளம் புதுமை. யோசித் தாலும் இன்பம். வாசித்தாலும் பேரின்பம். அற்புதம்.நிற்க. மரபுக் கவிதை என்று ஒன்று இருந்ததே. அது ஈராயிரம் ஆண்டுகளாகத் தமிழின் மண்ணோடும் மனத் தோடும் வேரும் விழுதும் விட்ட ஆலமரமாயிற்றே! புதுக் கவிதை என்ற சிட்டுக்குருவி வந்து அமர, ஆலமரமே சாய்ந்துவிட்டதோ? அய்யகோ! புதுக்கவிதை என்னும் உலக இலக்கிய வடிவம் கொண்டு தமிழுக்கு விதவிதமாகப் புத்தாடை கட்டி சுகித்துக் கொண்டிருக்கும் கவிப்பேரரசருக்கு, நிகழ்கால மரபுக் கவிதையும் நிர்வாணப்படுத்தப்பட்டு விடக்கூடாதென்ற பெருங்கவலை எப்போதும் உண்டு.அங்ஙனம் விளைந்ததே இப்படைப்பு. மரபுக் கவிதைகளின் அருஞ்சுவைத் தொகுப்பு. இன்றைய தலைமுறை யினருக்காகப் பழைய பனை ஓலையில் நவீனத்தின் நளினத்தோடும் மரபின் அழகியலோடும் தீட்டப்பட்ட எழுத்தோவியம்!

உங்கள் கருத்துக்களை பகிர :
வைரமுத்து :

கவிதைகள் :

விசா பப்ளிகேசன்ஸ் :