ரகசியமாய் ஒரு ரகசியம் (பாகம்-2)

ஆசிரியர்: ஓஷோ

Category இலக்கியம்
Publication கவிதா பதிப்பகம்
FormatPaperblack
Pages 992
ISBN978-81-8345-408-7
Weight950 grams
₹600.00 ₹480.00    You Save ₹120
(20% OFF)
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866
புத்தகத்தின் உள்பக்கம் பார்க்க Click Here"உண்மையை இடமாற்றம் செய்ய
முடியாது. அதை இடமாற்றம் செய்வதற்கு வழியே இல்லை. எனது உண்மை எனது உண்மை தான். நான்அதைப்பற்றி பேசமுடியும், ஆனால் அதைப்பற்றி பேசுவது என்பது அதை உனக்குள் இடமாற்றம் செய்வது அல்ல. அதை நீங்கள் காது கொடுத்து கேட்பது அதைப் புரிந்து கொள்வதாகாது. நீங்கள் உங்களது சொந்தக் கண்களை
திறந்தாக வேண்டும்." "ஓர் உண்மையான குருவின் செயலானது கடவுள் இருக்கிறார் என்றுஉங்களுக்கு கூறுவதல்ல. ஆனால்- நீங்கள் கண்களை திறப்பதற்கு உங்களுக்கு உதவுவதாகும், உங்களது - ஆன்மாவின் ஜன்னல்களைத் திறந்து உங்களால் பார்க்கும் படி செய்வதாகும்,
அப்போது தான் நீங்கள் 'கடவுள்' - என்கிற வார்த்தையின் அர்த்தத்தை - உங்களது சொந்த எலும்புகளில், இரத்தத்தில், உங்களது எலும்பு மஜ் ஜைகளில் அறிந்து கொள்ள முடியும். உங்களுக்காக நான் எனது கண்களால் பார்க்க முடியாது உங்களுக்காக நான்எனது கால்களால் நடக்கமுடியாது. உங்களுக்காக நான் எனது சிறகுகளால் பறக்கமுடியாது. நீங்கள் தான் உங்களது வாழ்க்கையை வாழ வேண்டும். நீங்கள் | தான் உங்களது மரணத்தை அடையவேண்டும்."

ஆழ்ந்த சிந்தனை இல்லாமல் எதுவும் சாத்தியப்படாது. கண்டுணர்தல் ஒருவரை இலக்கிற்கு கொண்டு வருகிறது. ஆழ்ந்த சிந்தனையினால் எதிரிடையாக மாற்றப்பட வேண்டியது என்ன வென்றால் அது தன்னுணர்வுள்ள உணர்ச்சி மூலமாகும். இன்னமும் வெளிப்படுத்தப்படாத முதன்மைச் சக்தியை நோக்கி அது தன்னை இயக்கியாக வேண்டும். நமது ஆறு அடி உடம்பிற்குள், இந்த சொர்க்கமும் பூமியும் அமைவதற்கு முன்பு இருந்த உருவத்திற்காக கடும் முயற்சி செய்ய வேண்டும். இன்று மக்கள் உட்கார்ந்து கொண்டு, ஒன்று அல்லது இரண்டு மணி நேரம் தியானம் செய்கின்ற போது, அவர்கள் தங்களது நான் உணர்வினை மட்டுமே பார்த்துக் கொண்டு அதை ஆழ்ந்த சிந்தனை என்று அழைக் கின்றனர், அதிலிருந்து என்ன வெளிவர முடியும்?

உங்கள் கருத்துக்களை பகிர :
ஓஷோ :

இலக்கியம் :

கவிதா பதிப்பகம் :