யோகாசனம் கற்றுக்கொள்ளுங்கள்

ஆசிரியர்: தமிழ்வாணன்

Category ஆன்மிகம்
Publication மணிமேகலைப் பிரசுரம்
FormatPaperBack
Pages N/A
Weight150 grams
₹80.00      
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866யோகம் என்னும் சொல்லுக்கு ஒன்று படு தல் என்று பொருள்.உயிர்களாகிய நாம் இவ்வுலக வாழ்க்கையில் முழுக்க முழுக்கத் திளைத்திருக்கும்போதே, நமக்குள்ளே இருக்கும் இறைவனோடு இடைவிடாது ஒன்று பட்டிருப்பதே உண்மையான யோகமாகும்.உயிரை ஜீவாத்மா என்றும், இறைவனைப் பரமாத்மா என்றும் குறிப்பிடுவது வழக்கம்.யோகங்களில் பல வகைகள் உண்டு. ஹடயோகம். இராஜயோகம், கர்மயோகம், பக்தியோகம், ஞான யோகம், மந்திரயோகம் என்ற பெயர்களால் அவை வழங்கப்படுகின்றன. இவற்றைத் தவிர வேறு பல யோகங் களும் உண்டு. ஆனால் அவையெல்லாம் அவ்வளவு முக்கியமானவையாகக் கருதப்படுவதில்லை.முக்கியமான யோகங்களுக்குள்ளேயே, எல்லா யோகங் களும் எல்லா ஆண் பெண்களுக்கும் பொருந்தக்கூடியவை யல்ல. எடுத்துக்காட்டாக, சிந்திக்கும் சக்தி இல்லாத வர்களுக்கு ஞானயோகம் பயன்படாது. எளிதில் உள்ளம் உருகாத கல்மனம் படைத்தவர்களுக்கு பக்தியோகம் பயன் படாது. செயல்வேகம் இல்லாத வெறும் சிந்தனையாளர் களுக்குக் கர்மயோகம் பயன்படாது.

உங்கள் கருத்துக்களை பகிர :
தமிழ்வாணன் :

ஆன்மிகம் :

மணிமேகலைப் பிரசுரம் :