யுரேகா யுரேகா-2

ஆசிரியர்: S.ஜனார்த்தன்

Category சிறுவர் நூல்கள்
FormatPaperback
Pages 80
Weight100 grams
₹50.00 $2.25    You Save ₹2
(5% OFF)
Only 2 copies left! Delivery in 4-7 Days
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866
புத்தகத்தின் மேம்பட்ட உள்பக்கம் பார்க்க Click Here



அறிவியல் வெளியீடு நூல்கள் வாசிக்க வாசிக்கத் திகட்டாதவை நாம் பார்க்கும் ஒவ்வொன்றையும் அறிவியல் பார்வையில் பார்க்க உதவுகின்றன. அறிவியல் வெளியீடுகளில் சில பல பதிப்புகளைப் பெற்று இருக்கின்றன. எதனாலே... எதனாலே...? ஏன்... எப்படி...? உங்களுக்குத் தெரியுமா? யுரேகா, யுரேகா போன்ற நூல்கள் குழந்தைகள் முதல் பெரியவர்கள்வரை பெரும் வரவேற்பைப்
பெற்றுள்ளன.

தமிழ்நாடு அறிவியல் இயக்கம் 37வது ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது. அறிவியல் மக்களுக்கே. அறிவியல் நாட்டிற்கே அறிவியல் சுயசார்பிற்கே என்ற கருத்தை முன்வைத்து பணி செய்து வருகிறது, அறிவியல் பிரச்சாரம், எழுத்தறிவு இயக்கம், கல்வி, சுகாதாரம், வளர்ச்சி, சமம், அறிவியல் வெளியீடு என பல்வேறு உபகுழுக்களாக பணிகளைத் திட்டமிட்டு செய்துவருகிறது. விவசாயிகள் முதல் விஞ்ஞானிகள் வரை உறுப்பினர்களாக உள்ளனர். மக்களிடையே அறிவியலை எளிமையாக வும், தாய்மொழியிலும் விளக்கி அறிவியலைப் பரப்பி வருகிறது. சிறுவர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுவரும் துளிர், ஜந்தர் மந்தர் போன்ற அறிவியல் இதழ்களையும், ஆசிரியர்களுக்கு மாற்றுக் கல்வி குறித்து விவாதிக்க விழுது இதழையும், ஆண் பெண் சமத்துவத்தை மையப்படுத்தி அறிவுத்தென்றல் இதழும், அறிவியல் இயக்க உறுப்பினர் களுக்கு விஞ்ஞானச் சிறகு இதழும் வெளியிட்டு வருகிறது.

உங்கள் கருத்துக்களை பகிர :
சிறுவர் நூல்கள் :

அறிவியல் வெளியீடு :