யுத்த காண்டம் பாகம்-1

ஆசிரியர்: எம்.நாராயண வேலுப்பிள்ளை

Category சங்க இலக்கியம்
Publication விசா பப்ளிகேசன்ஸ்
FormatPaperBack
Pages 975
First EditionJul 2001
3rd EditionNov 2016
Dimensions (H) 24 x (W) 16 x (D) 3 cms
₹600.00 $25.75    You Save ₹30
(5% OFF)
Only 1 copy left! Delivery in 4-7 Days
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866இராவணனால் சிறைவைக்கப்பட்ட சீதாபிராட்டியை அனுமன் அசோகவனத்தில் கண்டு, 'இராமன் விரைவில் வந்து மீட்பான்' என்ற நற்செய்தியைக் கூறித் தேற்றி, இலங்கையை எரியூட்டி, 'கண்டேன் சீதையை' என்று இரகுகுல திலகனிடம் கூறித் தனக்கு இட்ட பணியைச் செவ்வனே செய்து முடித்தான்.
அனுமன் வைத்த தீ முற்றிலுமாக இலங்கையை எரித்ததால் இராவணன் கோபங்கொண்டு தன்னுடைய அமைச்சர் பிரதானிகளையும், படைத் தலைவர்களையும் அழைத்து, 'அடுத்து என்ன செய்வது?' என்று அவர்களுடன் ஆலோசனை செய்தான். அப்போது, மகோதரன், வக்கிரநந்தன், துன்முகன் போன்ற அமைச்சர்கள், 'அனுமன் ஆதிய குரங்குக் கூட்டத்தையும் இராம லக்குவர்களையும் கொல்ல வேண்டும்; அதற்குக் கட்டளையிடுங்கள்' என வேண்டி நின்றனர். அப்பொழுது கும்ப கருணன் எழுந்து, "பிறன் மனைவியை விரும்பிச் சிறை வைத்தல் நல்லதன்று. நாம் பேசுவது மானம்; ஆனால் இடையில் நம் மனத்தில் கொண்டிருப்பதோ காமம். இது நல்லதன்று. சீதா பிராட்டியை இராமனிடம் விட்டுவிடுவதுதான் நல்லது; போர்தான் வேண்டுமென்றால் இராமனாதி யர் வலிமை பெறுவதற்கு முன்னே சென்று வெல்வதுதான் நல்லது.'' என்று ஆலோசனை கூறினான். படைகொண்டு பகைவரை அழிக்க வேண்டும் என்ற கும்பகருணன் ஆலோசனையை இந்திரசித்தும் கூறினான். இராவணன் அவர்கள் கருத்தை ஏற்றான்.
அப்பொழுது வீடணன் எழுந்து, "எனக்குத் தந்தையும் தாயும், தமையனும் ஆக எல்லாம் நீயே! நான் சொல்வதைக் கேள். இந்த இலங்கை மாநகரை ஒரு குரங்கு சுடவில்லை. அன்னை சீதாபிராட்டியின் நிகரிலாக் கற்புதான் சுட்டது. நான்முகனிடம், அலட்சியமாக மனிதரை விட்டுவிட்டு ஏனைய தேவர்கள் போன்றவர்களால் மரணம் நேரக்கூடாது என வரம் வேண்டியுள்ளாய். கயிலையைப் பெயர்த்தெடுத்த காலத்து, 'பெரிய குரங்கால் நினக்குக் கேடு வரும்' என நந்தியால் சாபம் பெற்றாய். தெய்வக் கற்பினளான வேதவதியின் சாபத்தைப் பெற்றாய்;

உங்கள் கருத்துக்களை பகிர :
எம்.நாராயண வேலுப்பிள்ளை :

சங்க இலக்கியம் :

விசா பப்ளிகேசன்ஸ் :