யுகங்களின் புளிப்பு நாவுகள்

ஆசிரியர்: மு. ஆனந்தன்

Category கவிதைகள்
Publication அகநி வெளியீடு
FormatPaperback
Pages 80
Weight150 grams
₹60.00 ₹54.00    You Save ₹6
(10% OFF)
Only 3 copies left! Delivery in 4-7 Days
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866இயற்கையின் மீதான அவருடைய நேசமே அத்தனை வகையான மரங்களையும், செடிகளையும் பூக்களையும், பறவைகளையும் கவிதைகளில் வாழ வைத்து கவிதைகளுக்கு சங்ககாலச் சாயலைக் கொடுக்கிறது.ஆனந்தனின் மொழிவளம் அதிசயப்பட வைக்கிறது. நான் கவிதை அவள் வாசகி, அம்மாக்களின் செவிப்பூக்கள், பிரபஞ்சி முலையூட்டுகிறாள், யுகங்களின் புளிப்பு நாவுகள் போன்ற பல கவிதைகளின் மொழிச்செறிவும் புனைவும் படிமங்களும் அற்புதமானது.
படிமங்களின் சுழல்பாதைக்குள் வாசகனைக் கைப்பிடித்துக் கூட்டிச்செல்லும் கவிஞர் சிறிது தூரத்திற்குப் பின் கையை விடுவது தெரியாமல் விட்டு விடுகிறார். வரிகள் தோறும் முன்னேறி வாசிக்கிற நமக்கு படிமங்கள் துலங்குகின்றன. கவித்துவத்தின் தரிசனம் தெரிகிறது. வேறு வேறு மாதிரியும் வாசிக்க முடிகிறது. அந்தப் படிமச்சுழலிலிருந்து வெளியேறலாம் அல்லது மீண்டும் மீண்டும் புதிய புதிய பாதைகளைக் கண்டுபிடித்துக் கொண்டேயிருக்கலாம். மு.ஆனந்தன் இதை மிக லாவகமாகக் கையாள்கிறார்.

உங்கள் கருத்துக்களை பகிர :
மு. ஆனந்தன் :

கவிதைகள் :

அகநி வெளியீடு :