யாரோ இவன் என் காதலன்

ஆசிரியர்: தமிழ் மதுரா

Category குடும்ப நாவல்கள்
Publication விசா பப்ளிகேசன்ஸ்
FormatPaper Pack
Pages 168
Weight250 grams
₹120.00 ₹112.80    You Save ₹7
(6% OFF)
Only 1 copy left! Delivery in 4-7 Days
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866
புத்தகத்தின் மேம்பட்ட உள்பக்கம் பார்க்க Click Hereமுகத்தில் சிறு கீற்றாக ஒட்டிக்கொண்ட முறுவல் மெல்ல மெல்ல மலர்ந்து விரிந்திருக்க, அடுத்தடுத்து மாறும் காட்சிகளைப் பளிச்சென்று மனக்கண்ணில் கண்டு கழித்திட என, வாசகர்களின் நெஞ்சத்தை வருடிச் செல்லும் எழுத்துக்களுக்குச் சொந்தக்காரியான எழுத்தாளர் தமிழ் மதுராவின் சிறுகதைகள், நாவல்களுக்கு நானும் ரசிகை.
இவரின் நாவல்கள் இதமான தென்றல் காற்றின் வருடல் களோடு கூடிய மென்மையான வாசிப்பானுபவத்தைத் தரும் என்பதை யாரும் மறுக்க மாட்டார்கள். அந்த வரிசையில் பதினைந்தாவதாக வெளிவருகின்றது. 'யாரோ இவன் என் காதலன்.' ஆரம்பமே, பல அனுமானங் களைத் தோற்றவிக்கும் வகையில் முடிச்சுக்களோடு… நாயகி அஞ்சலி, தான் வாழ்ந்த இடம் விட்டு வந்து சொந்தக் காலில் நிற்கும் முயற்சியில்.. தந்தையேஉலகம், உற்ற உறவென்று இருந்தவள், தனக்கு மணாளனாக இருந்தவனே தந்தையின் மரணத்துக்குக் காரணமானதில் என்ன ஏதென்ற விபரம் புரியாது தவித்து நிற்கிறாள். அப்போது ஜெய் வருகிறான். அவள் நடத்தும் உணவு விடுதியில் சாப்பிட வந்தவன் அவளுக்குத் துணையாக நடக்க முனைகிறான். தகப்பனின் இறப்பு, அதனோடு தொடர்புடைய மர்மங்கள் என ஒவ்வொன்றையும் மெல்ல மெல்ல விடுவிக்க விடுவிக்க வாசகர்களை கதை கட்டிப்போடுகிறது. துப்பறியும் கதை, இதம் தரும் காதலோடு ! புதிய முயற்சியொன்றை வெகு லாவகமாக எடுத்து நிறைவாகவே சுபம் போட்டுள்ளார் மதுரா. மேலும் மேலும் வித்தியாசமான கதைக்களங்களைக் கையி லெடுத்து வெற்றிகரமாகப் படைத்திட அன்பு வாழ்த்துக்களோடு.
அன்புடன், எழுத்தாளர் ரோசி கஜன்.

உங்கள் கருத்துக்களை பகிர :
தமிழ் மதுரா :

குடும்ப நாவல்கள் :

விசா பப்ளிகேசன்ஸ் :