யாமத்தில் அடர்ந்த மழை

ஆசிரியர்: சவிதா

Category கவிதைகள்
Publication பரிதி பதிப்பகம்
FormatPaperback
Pages 92
First EditionMar 2021
Weight150 grams
Dimensions (H) 24 x (W) 1 x (D) 16 cms
₹130.00 $5.75    You Save ₹6
(5% OFF)
Only 2 copies left! Delivery in 4-7 Days
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866ஏதோ ஒரு காரணமாய் நெய்தல் நிலமே எனக்கு பிடித்திருக்கிறது. எனக்குள் இருக்கும் அந்த மீன் மிக உயிர்ப்புடன் துடிப்பது அந்த கரைகளில்தான். அதனாலேயே கடற்கரை நகரங்களை நான் அவ்வளவு விரும்புகிறேன். அகத்துறையிலும் பிரிவாற்றாமை அந்த துறையில்தான் வருகிறது. இதைவிட சரியான ஆடுகளம் எனக்கு இருக்க முடியாது. ஆடுகளங்களில் கூட படுகளமாய் உருவகித்து வெட்டக் குனியும் தலை என்னுடையது. இறைவனை அடையும் மார்க்கங்களில் கூட தாச பாவம்தான் எனக்கு பிடிக்கிறது. முழுமையானவளாய் என்னால் அவ்வாறே உணர முடிகிறது. எத்தனை படி மேலேறினும் அறிவு சூழ் மேடைகளில் முழங்கினாலும் அறிவு மட்டுமே சார்ந்த ஒரு வாழ்க்கையை நம்மால் வாழ்ந்திடவே முடியாது. கடைசியாய் எஞ்சியிருப்பது ஆணும் பெண்ணுமான படிமம் மட்டுமே. தொன்மை எனும் கதவை தொலைத்து விட்டு நாகரீக திரைச்சீலை மறைவில் வாழ்வது நிம்மதியான விஷயமில்லை. என்னை மென்மேலும் இழுத்து உயிர்ப்பாய் உணரச் செய்வது பெண்மையின் பேரன்பு படிமங்களே. வேறெதையும் விட இந்த கவிதைகளே என்னை பெரும் புதைகுழியில் இருந்து மீட்டெடுத்தன. முழுக்க முழுக்க இது எனது வடிகால் மட்டுமே. முகநூலில் பார்த்து விட்டு தோழராய் மாறிப்போன இளம்பரிதியின் முழு முயற்சி மட்டுமே இந்த புத்தகம். எந்நேரமும் தகப்பனாகவே வாழும் மனிதனை தோழனாய் பெற்றது பெரும் மகிழ்ச்சி. புத்தக வடிவில் பார்க்கத் துடித்த அத்தனை நல் உள்ளங்களுக்கும் நன்றி....

-அன்புடன் சவிதா.

உங்கள் கருத்துக்களை பகிர :
சவிதா :

கவிதைகள் :

பரிதி பதிப்பகம் :