யாப்பருங்கலக்காரிகை - புதிய முறை எளியவுரை

ஆசிரியர்: டாக்டர் தமிழண்ணல்

Category இலக்கியம்
Publication மீனாட்சி புத்தக நிலையம்
FormatPaperback
Pages 224
Weight250 grams
₹150.00 ₹135.00    You Save ₹15
(10% OFF)
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866இவற்றுக்கு உரை வரைந்தவர், அமித சாகரரின் ஆசிரியராகிய குணசாகரர் ஆவார். நூலும் உரையும் ஒரே காலத்தில் தோன்றின. அக்கால முறைப்படி, காரிகை மனப்பாடமாகும்; அதன் விளக்கம் ஆசிரியரால் வாய்மொழியாக உரைக்கப்படும். அவையே பின்பு ஏட்டில் எழுதப்பட்டன. இந்நூலைச் செய்வித்தவன், சோழ மண்டலத்து வேளிர் வழிவந்த சோழ அதிகாரிகளுள் ஒருவன். அவன் கண்டன் மாதவன் என்றும் காரிகைக் குளத்தூர்க் காவலன் என்றும் அவ்வூரிலேயே இந்நூல் அரங்கேற்றப் பெற்றதென்றும் அவனது காலமாகிய கி.பி. பத்தாம் நூற்றாண்டின் இறுதியே இந்நூல் தோன்றிய காலமென்றும் பெரும்புலவர் சு. சாமிஐயா, தம் காரிகைப் பதிப்பு ஆய்வுரையில், கல்வெட்டுச் சான்றுகளுடன் நிறுவியுள்ளார் (அண்ணாமலைப் பல்கலைக் கழகம் 1973). இவ்வுரை, பழையவுரை வழியே, மரபு மாறாமல் எழுதப்பட்டுள்ளது. எனினும் மிகவும் எளிமைப்படுத்தப்பட்டுள்ளது. தமிழ் மாணாக்கர்களுக்கு இந்நூல் யாப்பிலக்கணத்தை 'உள்ளங்கை நெல்லிக் கனி' என விளக்கிக் காட்டும்.

உங்கள் கருத்துக்களை பகிர :
டாக்டர் தமிழண்ணல் :

இலக்கியம் :

மீனாட்சி புத்தக நிலையம் :