யானை டாக்டர்
ஆசிரியர்:
ஜெயமோகன்
விலை ரூ.40
https://marinabooks.com/detailed/%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%88+%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D?id=1240-2060-1421-0131
{1240-2060-1421-0131 [{புத்தகம் பற்றி காலை ஆறு மணிக்குத் தொலைபேசி அடித்தால் எரிச்சலடையாமல் எடுக்க என்னால் முடிவதில்லை. நான் இரவு தூங்குவதற்கு எப்போதுமே நேரமாகும், ஏப்ரல், மே தவிர மற்ற மாதமெல்லாம் மழையும், சாரலும், குளிருமாக இருக்கும் இந்தக் காட்டில் பெரும்பாலானவர்கள் எட்டுமணிக்கே தூங்கிவிடுகிறார்கள். ஏழரை மணிக்கெல்லாம் நள்ளிரவுக்கான அமைதி குடியிருப்புகள் மீதும், கிராமங்கள் மீதும் பரவி மூடிவிட்டிருக்கும். என்ன சிக்கல் என்றால் ஏழரைக்கே தூங்குவது வனக்காவலர்களும் தான். ஆகவே நான் ஒன்பது மணிக்கு மேல் நினைத்த நேரத்தில் என் ஜீப்பை எடுத்துக்கொண்டு ஏதாவது ஒரு வனக்காவலர் முகாமுக்குச் சென்று நாலைந்து காவலர்களை ஏற்றிக்கொண்டு காட்டுக்குள் ஒரு சுற்று சுற்றிவருவேன். என் பணிகளில் நான் முக்கியமானதாக நினைப்பதும் இதுதான். பகல் முழுக்கச் செய்யும் அர்த்தமற்ற தாள் வேலைகள் அளிக்கும் சலிப்பில் இருந்து விடுபட்டு என்னை ஒரு வனத்துறை அதிகாரியாக உணர்வதும் அப்போது மட்டுமே.
<br/>}]}
-----------------------
www.marinabooks.com
80,000+ தமிழ்ப் புத்தகங்கள் !!!
10,000+ எழுத்தாளர்கள் !!!
1,000+ பதிப்பகங்கள் !!!
Call / SMS / WhatsApp 88834 88866