யவன ராணி -2
ஆசிரியர்:
சாண்டில்யன்
விலை ரூ.350
https://marinabooks.com/detailed/%E0%AE%AF%E0%AE%B5%E0%AE%A9+%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%BF+-2?id=1155-7992-1162-5775
{1155-7992-1162-5775 [{புத்தகம் பற்றி யவன ராணி' நான் இதுவரை எழுதிய சரித்திரக் கதைகளுக்குள் சிறந்தது என நினைக்கிறேன். அது சிறப்பாய் அமைந்ததற்குத் தமிழ்ப் பெருமக்களின் உற்சாகந்தான் மூல காரணம். கதையில் காணப்படும் கதாபாத்திரங்களுடன் ஒன்றி, அவர்களின் சுக துக்கங்களை அனுபவித்து அவ்வப் பொழுது 'குமுதம்' காரியாலயத்துக்கும், நேரிடையாக எனக்கும் கடிதங்களை எழுதிய ஏராளமான வாசகர்கள் இந்தக் கதையின் வெற்றிக்குக் காரணம் என்று சொன்னால், அது சம்பிரதாயத்துக்காகவோ, அவையடக்கத்தின் அவசியத்தை முன்னிட்டோ சொல்லும் வார்த்தையல்ல. முக்காலும் உண்மை .
<br/>யவன ராணி, பூவழகி இவர்களின் அழகைப் பற்றியும் இளஞ்செழியன் வீரத்தைப்பற்றியும் இலி ஆஸுவின் பயங்கரத்தைப்பற்றியும், டைபீரியஸின் கடமை உணர்ச் சியைப் பற்றியும் மற்றும் பலப் பல அம்சங்களைப் பற்றியும் அவ்வப்பொழுது பாராட்டுக் கடிதங்களை எழுதினார்கள். "கதையை இப்படித் திருப்பினால்தான் சரியாயிருக்கும்” என்று குக்கிராமங்களிலிருந்து கடிதம் எழுதி யோசனை சொன்னவர்கள் உண்டு. யவன ராணி மாண்டுவிடுவாள் என்பதை முன்கூட்டியே அறிந்து, “எங்கள் ராணியைக் கொல்ல வேண்டாம்” என்று தடுத்தவர்கள் உண்டு. முன் பின்னாக ஏதாவது கதையில் வந்திருப்பதாகத் தெரிந்தால், அந்த முரண்பாட்டை எடுத்துக் காட்டியவர்களும் உண்டு. வாசக அன்பர்கள் எழுதிய ஒவ்வொரு கடிதமும் எனக்கு எழுத உற்சாகமூட்டியது. அவர்கள் அன்பு என்னை ஆட் கொண்டது. என் பேனாவுக்கு வலுவூட்டியது. சிந்தனையைத் துரிதப்படுத்தியது.
<br/>}]}
-----------------------
www.marinabooks.com
80,000+ தமிழ்ப் புத்தகங்கள் !!!
10,000+ எழுத்தாளர்கள் !!!
1,000+ பதிப்பகங்கள் !!!
Call / SMS / WhatsApp 88834 88866