யவன ராணி ( பாகம் 1&2 )

ஆசிரியர்: சாண்டில்யன்

Category சரித்திரநாவல்கள்
Publication வானதி பதிப்பகம்
FormatHardbound
Pages 1282
Weight950 grams
₹735.00 ₹661.50    You Save ₹73
(10% OFF)
Delivery in 4-7 Days
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866யவன ராணியின் கதை சரித்திர ஆதாரமும், இலக்கிய ஆதாரமும் கலந்தது. சுமார் 1800 வருடங்களுக்கு முன்பு இருந்த தமிழகத்தைப்பற்றிய கதை இது. தமிழர்கள் சீரும் சிறப்புமாக வாழ்ந்த பொற்காலம் அது. வெள்ளைக்காரர்களான யவனர்கள் தமிழர்களிடம் சேவகம் செய்த காலம். தமிழர் திரை கடலோடி வாணிபம் செய்து, பொன்னைக் கொண்டு வந்து தமிழகத்தில் குவித்த காலம். தமிழர் நாகரிகம் மேல் திசை நாடுகளிலெல்லாம் பரவிக் கிடந்த காலம். அந்தக் காலத்தைப் பற்றி ஒரு கதை எழுத வேண்டுமென்ற ஆசையால், என் சொந்தக் கற்பனையில் கதாபாத்திரங்களை எழுப்பி, அந்தப் பாத்திரங்களுடன் சரித்திரப் பாத்திரங்களை இணைத்தும் மோத விட்டும் இந்தக் கதையை உருவாக்கினேன்.
இதில் கதையை மட்டும் மக்கள் அறிந்து கொள்ள வேண்டுமென்பது எனது விருப்பமல்ல. நமது வரலாற்றுப் பெருமைகளையும், இலக்கியச் சான்றுகளையும் பொது மக்கள் குறிப்பாகக் கல்லூரி மாணவர்கள் அறிய வேண்டுமென்ற விருப்பத்தால், இலக்கியத்தையும் சரித்திரத்தையும் பெரும்பாலும் இணைத்தே கதையை ஒட்டியிருக்கிறேன்.

உங்கள் கருத்துக்களை பகிர :
சாண்டில்யன் :

சரித்திரநாவல்கள் :

வானதி பதிப்பகம் :