ம்

ஆசிரியர்: ஷோபா ஷக்தி

Category நாவல்கள்
Publication கருப்புப் பிரதிகள்
FormatPaperback
Pages 168
First EditionOct 2005
ISBN978-81-92971-53-7
Weight250 grams
Dimensions (H) 22 x (W) 14 x (D) 2 cms
$6      

தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866
புத்தகத்தின் உள்பக்கம் பார்க்க Click Here

இந்த நாவலின் கட்டமைப்பு மிகவும் நுட்பமானது. இருபத்தைந்து ஆண்டுகால ஈழத்து அரசியல் சமூக சரித்திரமும் அதை ஒட்டிய புலம்பெயர் வாழ்வியல்களும் இந்தச் சிறிய நாவலில் அதன் எல்லா முரண்பாடுகளோடும் உக்கிரமாக எழுதப்படுகிறது.மனுஷ்யபுத்திரன் - இந்தியா டுடே யதார்த்த நிகழ்வொன்றின் அலுக்காத கதையாக இது பிரமாதமாய் வார்க்கப்பட்டிருக்கிறது தேவகாந்தன் காலம் எதுவும் சொல்ல முடியாத மெளனமே வாசிப்பின் முடிவில் மனதை நிறைக்கிறது.ச. தமிழ்ச்செல்வன் - புத்தகம் பேசுது ஒரு தனிமனிதன் யுத்தத்தின் பிடியில் சிக்கும்போது எப்படி நசுக்கப்படுகிறான் என்பது அழுத்தமாகப் பதிவு செய்யப் பட்டிருக்கிறது.ஆனந்தவிகடன் துயரங்களும், அவமானங்களும், வலிகளும் நிறைந்த வரிகளுக்கிடையே அவரால் எல்லாவற்றையும் இயல்பாக கேலி செய்து கொண்டும் போக முடிகிறது என்பது தான் ஷோபாசக்தியிடம் நாம் காணும் வசீகரம்.
முப்பது வருடங்களாகக் கொடிய யுத்தம்! ஒரு இலட்சம் மனிதர்கள் கொல்லப்பட்டார்கள் அய்ம்பதினாயிரம் அங்கவீனர்கள் இருபதாயிரம் விதவைகள் பத்தாயிரம் பேருக்குப் பைத்தியம் பூசா, மகசீன், களுத்துறை பாரிய இடப்பெயர்வுகள், புலப்பெயர்வுகள் இயக்கங்கள், மாவீரர்கள் தமிழீழ ஒறுப்புச்சட்டம், தமிழீழச் சிறை, துரோகிகள் பேச்சுவார்த்தை மானுட ஒன்றுகூடல் பொங்கு தமிழ் கதைகளும், பெருங்கதைகளும் சொல்லப்பட்டுக் கொண்டேயிருக்கின்றன எல்லாக் கதைகளையும் கேட்டுக்கேட்டு 'ம்' சொல்லிக்கொண்டேயிருக்கும் என் சனங்களுக்கு...

உங்கள் கருத்துக்களை பகிர :