மொழி நூற்கொள்கையும் தமிழ் மொழி அமைப்பும்
ஆசிரியர்:
கா.சு.பிள்ளை
விலை ரூ.50
https://marinabooks.com/detailed/%E0%AE%AE%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF+%E0%AE%A8%E0%AF%82%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D+%E0%AE%AE%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF+%E0%AE%85%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D?id=1511-0620-2435-0214
{1511-0620-2435-0214 [{புத்தக பற்றி தமிழ்மொழி அமைப்பை ஆராய்ச்சி செய்யுமுன் மொழிநூற் பொதுக்கொள்கைகளை அறிந்து கொள்ளுதல் அவசியம். ஆதலின், அவற்றை முதலில் ஆராய்வாம்.

மக்கள் தங்கள் கருத்துக்களை ஒருவர்க்கொருவர் தெரிவித்துக் கொள்ளுதற்குப் பயன்படுத்துங் கருவி ஒலி மாத்திரமன்று. படம் எழுதிக் காட்டுவதனாலும், கைக்குறிப்பு முதலிய அடையாளங்கள் செய்வதனாலும் பல நிறக் கொடிகள் எடுப்பதனாலும், அமெரிக்க மிலேச்சர்கள் செய்வதுபோலத் தோற்சாட்டை ஒன்றினைப் பலவிதமாகக் காற்றிலடிப்பதனாலும், பிறவற்றாலும், கருத்தறிவித்தல் பல நாட்டுச் சரித்திர வாயிலாக அறிகிறோம்.

ஐயறிவுடைய உயிர்கள் யாவும் தம் உணர்ச்சிகளைக் குறிப்பதற்கு மெய்ப்பாடுகள் தோற்றுவித்தல் யாவரும் அறிந்ததே. முகத்தைச் சுளித்தல், கண் சிவத்தல், புருவ நெரித்தல், நடு நடுங்கல், நகைத்தல், முகமலர்தல், முகம் வாடுதல் முதலியன வெவ்வேறு உணர்ச்சிகளைக் குறிப்பித்தல் தெளிவு. நெஞ்சம் கடுத்ததை முகம் காட்டும் என்னும் இயற்கை உண்மையை ஆசிரியர் திருவள்ளுவனார்,

“அடுத்தது காட்டும் பளிங்குபோல் நெஞ்சம்

கடுத்தது காட்டும் முகம்.” (குறள் 706)

என்ற குறளில் இனிது உணர்த்தினர்.

www.marinabooks.com
80,000+ தமிழ்ப் புத்தகங்கள் !!!
10,000+ எழுத்தாளர்கள் !!!
1,000+ பதிப்பகங்கள் !!!
Call / SMS / WhatsApp 88834 88866