மொழி ஒப்பியலும் வரலாறும்

ஆசிரியர்: ரா.சீனிவாசன்

Category இலக்கியம்
Publication கௌரா பதிப்பக குழுமம்
FormatPaper Back
Pages 192
Weight200 grams
₹180.00 ₹169.20    You Save ₹10
(6% OFF)
Only 1 copy left! Delivery in 4-7 Days
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866மொழி வளர்ச்சியைக் கருத்தில் கொண்டு மொழியில் ஏற்படும் மாற்றங்களை உரிய விளக்கங்களுடன் அறிவதுடன், ஒப்பீட்டு நிலையில் எடுத்துக்காட்டுவதும் அவசியமாகிறது. அந்த மாற்றங்களையும் தோற்றங்களையும் அறிந்து போற்ற வேண்டுவது மொழியியல் அறிஞர்களுடைய கடமையும் கூட.
மொழிக் கடலில் மூழ்கி முத்தெடுக்கின்ற பாங்கில் மொழிநூல் புலமையுடைய பேராசிரியர் டாக்டர் ரா. சீனிவாசன் அவர்கள் தெள்ளிதின் ஆய்ந்து ஒப்பியல் நோக்கில் ஏற்பட்டுள்ள மாற்றங்களின் வரலாற்றினை தெளிவுபடுத்தும் வகையில் மொழி ஒப்பியலும் வரலாறும் என்னும் இந்நூலை ஆக்கித் தந்துள்ளார். திராவிட மொழிகளின் ஒலியியலில் தொடங்கி, ஒலிகளின் தன்மை, மாற்றங்கள், ஏற்ற இறக்கங்கள், ஒலி நோக்கில் அமையும் சொற்களின் அமைப்பு முறை, சொல்லாக்க முறை, வினை வகைகள், இலக்கண மாற்றங்கள், மொழிக்கலப்பு, காலந்தோறும் மொழியில் ஏற்படும் மாற்றங்கள், தமிழ் எழுத்துகளின் வடிவ வரலாறு எனப் பரந்த ஆய்வுக் கண் கொண்டு விரிவாக ஆய்வு செய்து இந்நூலின்கண் விளக்கியுள்ளார்.மொழி கற்பாருக்கும், ஆய்வு செய்வாருக்கும், மொழி வளர்ச்சியில் ஆர்வமுடையவர்க்கும் இந்நூல் பெரிதும் பயன்படும்.

உங்கள் கருத்துக்களை பகிர :
ரா.சீனிவாசன் :

இலக்கியம் :

கௌரா பதிப்பக குழுமம் :