மொழிபெயர்ப்பியல் : இக்காலப் பார்வைகள்

ஆசிரியர்: அமரந்த்தா

Category நவீன இலக்கியம்
Publication நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்
FormatPaper back
Pages 104
First EditionApr 2008
ISBN978-81-234-1307-5
Weight150 grams
Dimensions (H) 22 x (W) 15 x (D) 2 cms
₹50.00 ₹47.50    You Save ₹2
(5% OFF)
Delivery in 4-7 Days

தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866தமிழ் மொழிபெயர்ப்பாளர்கள் சங்கம் 2007ஆம் ஆண்டு பிப்ரவரி 4 ஆம் நாள் நடத்திய இரண்டாவது பொதுக்குழுக் கூட்டத்தில் வாசித்து அளிக்கப்பட்ட பயன்மிக்க கட்டுரைகளின் தொகுப்பு இது.
இத்தொகுதியில் 1. மொழிபெயர்ப்பு: அன்றும் இன்றும் 2. படைப்பிலக்கிய மொழிபெயர்ப்பு: தமிழிலிருந்து ஆங்கிலத்துக்கு - ஓர் அனுபவப் பகிர்தல் 3. செவ்வியும் நவீனமும்: மொழிபெயர்ப்புச் சவால்கள், 4. தமிழ் மொழிபெயர்ப்புத் தளத்தில் சிற்றிதழ்களின் பங்கு. 5. அரசியல் மொழிபெயர்ப்பும் மொழிமீட்பும் என்னும் ஐந்து கட்டுரைகள் தருகின்ற சுவையான செய்திகள், மிகக் கனமானவை, தரமானவை.
எல்லாக் கட்டுரையாளர்களும் மொழிபெயர்ப்பு நுணுக்கங்களை ஆயும் போது தாழ்ந்து போன தமிழின் தரத்தையும் அவலத்தையும் கண்டு வேதனைப்படுகின்றனர். மொழிபெயர்ப்பாளர்களுக்கு மூலமொழி இலக்கு மொழி என்னும் இரண்டிலும் ஆழ்ந்த ஈடுபாடும் புலமையும் தேவை என்பதையும் இருமொழிகளுக்கும் தனித்தனியுள்ள சிறப்புகளையும், நடை அமைப்பையும் இலக்கண மரபுவளத்தையும் அறிந்தேற்றுப் பணிசெய்ய வேண்டியது கடமை, கட்டாயம் என்பதையும் எடுத்துக்காட்டுகின்றனர்.
இனி ஒவ்வொரு கட்டுரையையும் தனியே அணுகி ஆராய்ந்தால் அதனதன் சிறப்புப் புலனாகும்.
முதல் கட்டுரை “ மொழிபெயர்ப்பு: அன்றும் இன்றும்” என்பது, மொழிபெயர்ப்பு தமிழுக்குப் புதியதன்று - சீவக சிந்தாமணி, ஐஞ்சிறு காப்பியங்கள், இராமகாதை, வில்லிபுத்தூரார் பாரதம் வரை பல இலக்கியங்கள் நேரிடையான மொழிபெயர்ப்புகள் என்று சொல்லத்தக்கவை அல்ல, சார்பு நூல்களே எனக் கொள்ளத்தக்கவை

உங்கள் கருத்துக்களை பகிர :
அமரந்த்தா :

நவீன இலக்கியம் :

நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் :