மெய்நிகர்

ஆசிரியர்: அகில் குமார்

Category நாவல்கள்
Publication ஜீவா படைப்பகம்
FormatPaper back
Pages 100
First EditionApr 2019
Weight150 grams
Dimensions (H) 22 x (W) 14 x (D) 1 cms
$4.5       Delivery in 1-2 Days

தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866
புத்தகத்தின் மேம்பட்ட உள்பக்கம் பார்க்க Click Here

உறவுச்சிக்கல் பல்வேறு வகைகளில் தமிழில் எழுதப்பட்டிருந்தாலும் இந்த நாவலின் பலமென்பது முழுமையானதொரு உளமாற்றதுக்கு உட்பட்ட தலைமுறையினரின் பார்வையில் அது சொல்லப்பட்டிருப்பதுதான். அறம் எது அறமின்மை எது? நடிக்கிறோமா உண்மையைச் சொல்கிறோமா என்றெல்லாம் கூட புரிந்து கொள்ள முடியாத ஒரு தலைமுறை உருவாகியிருப்பதை இந்த நாவல் அறிவிக்கிறது. இவர்களின் சிக்கல் எதுவும் கைக்கு சிக்கக்கூடிய நிலையில் இல்லை. ஒவ்வொரு கணமும் அலைபாய்ந்து கொந்தளித்துக் கொண்டே இருக்கின்றனர். பெண்களின் உணர்வுகள் இவ்வளவு நெருக்கமாக மிகக்குறைவாகவே எழுதப்பட்டுள்ளது. எனக்கு இந்த நாவலின் முதன்மையான பலம் என்று தோன்றுவது நாவல் முழுக்கவே தொனிக்கும் ஒரு செயற்கைத்தனமும் அவநம்பிக்கையும்தான். அத்தனை பேரும் போலியானவர்களாக சிக்கல் எங்கோ இருக்க, தீர்வை எங்கோ தேடுகிறவர்களாக சித்தரிக்கப்பட்டுள்ளனர். இப்படி கற்பித்துக்கொண்ட துயரில் உழல்வதைக்கூட வாழ்வின் இன்பங்களில் ஒன்றாக எண்ணிக் கொள்கின்றனர். நம் காலத்தின் உளச்சிக்கலை எடுத்துக்காட்டுகிறது என்ற வகையில் இது முக்கியமான ஆக்கம்.

உங்கள் கருத்துக்களை பகிர :