மூலிகையே மருந்து!

ஆசிரியர்: டாக்டர் வி விக்ரம்குமார்

Category உடல்நலம், மருத்துவம்
Publication தமிழ் திசை
FormatPaperback
Pages 128
ISBN978-81-943348-7-3
Weight200 grams
₹150.00 ₹142.50    You Save ₹7
(5% OFF)
Delivery in 4-7 Days
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866உணவே மருந்து என்பது தமிழ் முன்னோர் வாக்கு. அதேநேரம் உணவு காரணமாகவோ வேறு காரணங்களாலோ நோய் ஏற்பட்டால், அந்த நோய்களைத் தீர்ப்பதற்கு எளிய மருந்துகள், கை மருந்துகள் மூலம் காலம்காலமாக தீர்வு காணப்பட்டு வந்திருக்கிறது. இதிலிருந்து இன்னும் மேம்பட்டு நோய் தீர்க்கும் மூலிகைகளை சித்தர்கள் முன்வைத்தார்கள்.
சித்த மருத்துவ முறை, ஆயுர்வேத மருத்துவ முறை, ஏன் அலோபதி எனப்படும் மேற்கத்திய மருத்துவ முறையுமே தாவரங்களிலிருந்து மருந்துப் பொருட்களை எடுத்துப் பயன்படுத்தி வருகின்றன. அதிலும் குறிப்பாக தமிழ் மருத்துவ முறையான சித்த மருத்துவம் எளிய மூலிகைகள் தொடங்கி, அரிதான மூலிகைகளின் மருத்துவப் பண்புகளை அடிப்படையாகக் கொண்டது.
நம் வீடுகளிலும் புல்வெளிப்பகுதிகளிலும் மிகச் சாதாரணமாக வளரக்கூடிய கீழாநெல்லி மஞ்சள் காமாலைக்கான கைகண்ட மருந்து, அதேபோல நம் அஞ்சறைப் பெட்டியில் இருக்கும் பல நறுமணப் பொருட்கள் மருத்துவ குணம் கொண்டவை. இவை அனைத்துமே தாவரங்களை அடிப்படையாகக் கொண்டவை. இதுபோன்ற 50 மூலிகைகளின் மருத்துவ குணங்களையும் பயன்களையும் இந்த நூல் எடுத்துரைக்கிறது. சித்த மருத்துவரும், வளர்ந்துவரும் மருத்துவ எழுத்தாளருமான வி.விக்ரம்குமார் இந்த நூலை எழுதியிருக்கிறார்.

உங்கள் கருத்துக்களை பகிர :
உடல்நலம், மருத்துவம் :

தமிழ் திசை :