முப்பெருங் கவிஞர்கள்

ஆசிரியர்: அருணன்

Category நாவல்கள்
Publication வசந்தம் வெளியீட்டகம்
FormatPaper back
Pages 240
Weight250 grams
₹120.00 ₹108.00    You Save ₹12
(10% OFF)
Only 1 copy left! Delivery in 4-7 Days
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866
புத்தகத்தின் உள்பக்கம் பார்க்க Click Hereபாரதி, பாரதிதாசன், பட்டுக்கோட்டை எனும் மூன்று பெருங்கவிஞர்களை முழுசாக மதிப்பிடுவது.இந்த மூவருக்கும் இடையில் உள்ள சித்தாந்தத் தொடர்ச்சியைச் சொல்வது. அழகியலை எடுத்துரைப்பது.

அந்தக் காலத்தில் மார்க்சியர்கள் மத்தியில் பாரதி பற்றியும், பாரதிதாசன் பற்றியும் தீவிரமான விவாதம் நடைபெற்றது. கடவுளர்கள் பற்றியும், ஆன்மிகம் பற்றியும் கவிதைகள் படைத்த பாரதி எப்படி முற்போக்காளன் ஆவான் எனக் கேட்டவர்கள் உண்டு. திராவிட இனவாதம் பேசிய பாரதிதாசன் எப்படி முற்போக்காளன் ஆவான் எனக் கேட்டவர்களும் உண்டு. பட்டுக்கோட்டை பற்றித்தான் இவர்கள் மத்தியில் பிரச்சனை எழவில்லை. ஆனால், சினிமாவுக்குப் பாட்டு எழுதியவன் எப்படிக் கவிஞன் ஆவான் எனக் கேட்ட மார்க்சியரல்லாதார் உண்டு. இந்தச் சூழலில்தான் இந்த நூல் எழுந்தது. வெளிவந்து 15 ஆண்டுகள் ஓடிவிட்டன. வினோதம் என்னவென்றால் இப்போதும் இத்தகைய வாதங்கள் ஆங்காங்கே எழுகின்றன. ஒரு விதத்தில் இது, இந்தக் கவிஞர்களின் ஆளுமையை நிலை நாட்டுகிறது. கூடவே இந்த நூலுக்கு இப்போதும் தேவை இருப்பதை உணர்த்துகிறது. ஆகவே, மறுபதிப்புச் செய்யத் துணிந்தேன்.

உங்கள் கருத்துக்களை பகிர :
அருணன் :

நாவல்கள் :

வசந்தம் வெளியீட்டகம் :