முதுமை என்னும் பூங்காற்று

ஆசிரியர்: ப.திருமாவேலன்

Category உடல்நலம், மருத்துவம்
FormatPaper Pack
Pages 184
ISBN978-81-8473-317-1
Weight200 grams
₹125.00 $5.5    You Save ₹6
(5% OFF)
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866
புத்தகத்தின் மேம்பட்ட உள்பக்கம் பார்க்க Click Hereநோய்நாடி நோய்முதல் நாடி அதுதணிக்கும்வாய்நாடி வாய்ப்பச் செயல்._ நோய் இன்னதென்று அறிந்து, அதன் காரணத்தை ஆராய்ந்து, அதைப் போக்கும் வழியைக் கண்டுபிடித்து, உரிய மருத்துவ உதவியைப் பிழையில்லாமல் செய்ய வேண்டும். அப்படிச் செய்தால் நோய் அடியோடு ஒழிந்து விடும் என்பது வள்ளுவர் வாக்கு.முதுமையில், உடல் தளர்ச்சியினாலும், சத்தில்லாத உணவினாலும் நோய்களின் தாக்குதல் அதிகமாக இருக்கும். நோய் வராமல் தடுத்து உடல்நலத்தைப் பாதுகாக்க, உணவு முறையையும், உடற்பயிற்சியையும் சீராகக் கடைப்பிடிக்க வேண்டும். நோயின் அறிகுறி தெரிந்தால் அதை அடியோடு ஒழிக்க முயற்சி செய்யவேண்டும்.முதுமையில் வரும் நோய்கள் என்னென்ன... அந்த நோய்கள் வருவதற்கான காரணங்கள் என்னென்ன... நோய் வந்துவிட்டால் அதிலிருந்து எப்படி தற்காத்துக்கொள்வது... நோய்க்குரிய சிகிச்சை முறைகள் என்ன... மருந்துகளை உட்கொள்ளும் முறைகள் என்ன..? _ இப்படி பல கேள்விகளுக்குத் தெளிவான பதில் சொல்கிறார் 30 ஆண்டுகள் அனுபவம் கொண்ட முதியோர் மருத்துவர் வி.எஸ்.நடராசன்.இந்த நூல், முதியோர் தங்கள் வாழ்நாளில் உடல்நலத்துடன் வாழ வழி காட்டியிருப்பதோடு, பலருடைய சந்தேகங்களைத் தெளிவுபடுத்தும் வகையில், எளிய தமிழில் அனைவருக்கும் விளங்கும் நடையில் கேள்வி_பதில் பாணியில் எழுதப்பட்டிருக்கிறது.இளைஞர்களும் இந்த நூலைப் படித்துத் தெரிந்துகொண்டால், தங்கள் தாத்தா, பாட்டி, தாய், தந்தை ஆகியோரின் நிலையைப் புரிந்து கொண்டு, அவர்களுக்கு வழிகாட்டவும்இந்த பதில்கள் உதவும்!

“பத்மஸ்ரீ விருது வழங்கியபோது... முதியோர் மருத்துவர் வி.எஸ்.நடராசன் (30 ஆண்டுகளுக்கு முன்பு, லண்டனில் முதியோர் மருத்துவத்தில் - சிறப்புப் பயிற்சியும் பட்டமும் பெற்றவர். சென்னை அரசு பொது. மருத்துவமனையில் முதியோர் நலனுக்காக தனிப் பிரிவை ஏற்படுத்தியவர். முதியோர்களின் வீடு தேடிச் சென்று, சிகிச்சை அளிக்கும் திட்டத்தை முதன்முதலில் சென்னையில் தொடங்கியவரும் இவரே! தமிழ், ஆங்கிலம் என இரு மொழிகளிலும் இருபதுக்கும் மேற்பட்ட நூல்களை எழுதியிருக்கிறார். மூத்த குடிமக்கள் மன்றத்தின் தலைவராக பல ஆண்டுகள் பணியாற்றியிருக்கிறார், இவருக்கு வழங்கப்பட்டுள்ள விருதுகள்: தமிழ்நாடு அரசின் 'சிறந்த சமூக சேவகர்' விருது, 'டாக்டர் B.C.ராய் தேசிய விருது', பிரிட்டிஷ் முதியோர் மருத்துவ சங்கத்தின் பொன்விழா ஆண்டு விருது'. 2010-ம் ஆண்டு உலக முதியோர் தினத்தன்று, 'வாழ்நாள் சாதனையாளர் விருது' வழங்கி, மத்திய அரசு இவரை கெளரவித்து இருக்கிறது. 2012-ம் ஆண்டு இந்திய அரசின் உயரிய விருதான 'பத்மஸ்ரீ விருதும், 'முதியோர் மருத்துவ தந்தை' என்ற பட்டமும் வழங்கி, மத்திய அரசு இவரை கெளரவித்து இருக்கிறது.


உங்கள் கருத்துக்களை பகிர :
ப.திருமாவேலன் :

உடல்நலம், மருத்துவம் :

விகடன் பிரசுரம் :