முதற்றாய்மொழி அல்லது தமிழாக்க விளக்கம்

ஆசிரியர்: ஞா.தேவநேயப் பாவாணர்

Category இலக்கியம்
FormatHardbound
Pages 366
Weight400 grams
₹200.00 $8.75    You Save ₹10
(5% OFF)
Only 4 copies left! Delivery in 4-7 Days
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866
புத்தகத்தின் உள்பக்கம் பார்க்க Click Hereதமிழ் மண்ணில் 79 ஆண்டுகாலம் வாழ்ந்து, 50 ஆண்டுகாலம் தமிழ் மொழி ஆய்வு செய்த அறிஞர்; தனித் தமிழ் ஊற்று: செந்தமிழ் ஞாயிறு; இலக்கணச் செம்மல்; வாராது வந்த மாமணி; தமிழ், தமிழர் நலம் காப்பதையே உயிர் மூச்சாகக் கொண்ட ஓர் ஊழி அறிஞர் மொழி ஞாயிறு அவர்கள்.

தமிழர் தொன்மையை உலகிற்கு அறிவித்தவர் கால்டுவெல் பெருமகனார்; தனித்தமிழ்க்கு வித்திட்டவர் பரிதிமாற் கலைஞர்; செடியாகத் தழைக்கச் செய்தவர் நிறை தமிழ் மலையாம் மறைமலையடிகள், அதனை மரமாக வளர்த்தெடுத்த பெருமைக் குரியவர் செந்தமிழ்ச் செல்வர், மொழி ஞாயிறு, தேவநேயப் பாவாணர், இவர் கண்டது தமிழ்; கேட்டது தமிழ்: உண்டது தமிழ் உயிர்ப்பது தமிழ் கொண்டது தமிழ்; கொடுப்பது தமிழ் விண்டது தமிழ், விளக்குவது தமிழ் என்று தமிழே என்பாகவும், தசையாகவும், குருதியாகவும் வாய்க்கப்பெற்ற தமிழின் முழுவுருவம் பாவாணர் ஆவார்.உலகின் முதற் செம்மொழியாகிய தமிழ்மொழியின் தொன்மை, முன்மை, நுண்மை, திண்மை, எண்மை, ஒண்மை, இனிமை, தனிமை, இளமை, வளமை, தாய்மை, தூய்மை, மும்மை, செம்மை, இயன்மை, வியன்மை ஆகிய பதினாறு பண்புகளையும் மறைத்தும், திரித்தும், மழுப்பியும், குழப்பியும் வரும் ஆரிய மேய்ப்பர்களுக்கு அறைகூவல் விடுக்கும் நிறைநூற் பெரும் புலவர் பாவாணர் அவர்கள்.

உங்கள் கருத்துக்களை பகிர :
ஞா.தேவநேயப் பாவாணர் :

இலக்கியம் :

பூம்புகார் பதிப்பகம் :