முடிவு எடுத்தல்

ஆசிரியர்: வெ.இறையன்பு

Category கட்டுரைகள்
Publication நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்
FormatPaperback
Pages 30
First EditionJul 2017
Weight50 grams
₹50.00 ₹47.50    You Save ₹2
(5% OFF)
Delivery in 4-7 Days

தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866
புத்தகத்தின் மேம்பட்ட உள்பக்கம் பார்க்க Click Hereபிரச்சினைகளின்போதும் சிக்கலாக உணரும் தருணங்களிலும் எப்படிப்பட்ட முடிவைத் தேர்ந்தெடுப்பது, எப்படியான அணுகுமுறையைக் கையாள்வது. சூழலுக்கேற்ப எப்படி நடந்துகொள்வது போன்ற குழப்பங்களிலிருந்து விடுபடுவது போன்ற பல்வேறு விளக்கங்கள் இந்நூலில் தெளிவுபடுத்தப்பட்டுள்ளன. முடிவெடுக்க இயலாத நிலையில் ஏற்படும் குழப்பங்களிலிருந்தும் மன உளைச்சல்களிலிருந்தும் மனித சமூகத்தை விடுவிக்கும் முயற்சியாக இந்நூல் அமையப்பெற்றுள்ளது.

முடிவெடுக்கும் திறமையே ஒருவரைத் தலைமைப் பொறுப்புக்கு அழைத்துச் செல்கிறது. முடிவெடுப்பவர், அதனால் விளையும் சாதக, பாதகங்களுக்குப் பொறுப்பானவராக இருப்பதால், பலர் பொறுப்பை ஏற்கப் பயப்படுகிறார்கள், பார்வையாளர் வரிசையில் அமர்ந்துகொண்டு 'அப்படிப் பேசியிருக்கலாம்', 'இப்படிப் பேசியிருக்கலாம் என்று வாய்கிழியப் பேசுகிறவர்களை மேடையில் ஏறி நான்கு வரிகள் பேசச் சொன்னால் தடுமாறுவார்கள், பற்கள் தந்தியடிக்கும், கைகள் நடுங்கும். பார்வையாளர்களாக யார் வேண்டுமானால் இருக்க முடியும். ஆனால் விளையாடுபவராகப் பலர் பார்வையிடும்போது ஆடுவது சிரமம். முடிவு எடுப்பது பற்றி எத்தனையோ மேலாண்மைப் புத்தகங்கள் பக்கம் பக்கமாக விவரித்து எழுதப்பட்டுவிட்டன. ஆனால், அவை நிறுவனங்களில், வர்த்தக அமைப்புகளில் முடிவெடுப்பதைப் பற்றியே பெரும்பாலும் சித்திரிக்கின்றன. மேற்கத்தியச் சூழலையொட்டி அவற்றில் மேலாண்மைக் கருத்துகள் கூறப் படுகின்றன.

உங்கள் கருத்துக்களை பகிர :
வெ.இறையன்பு :

கட்டுரைகள் :

நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் :