மீண்டும் ஜீனோ

ஆசிரியர்: சுஜாதா

Category கதைகள்
Publication விசா பப்ளிகேசன்ஸ்
FormatPaperback
Pages 336
Weight250 grams
₹190.00 ₹152.00    You Save ₹38
(20% OFF)
Only 2 copies left! Delivery in 4-7 Days
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866



முதல் அத்தியாயத்தில் நுழைவதற்கு முன் புதிய வாசகர்களுக்கு வரவேற்பு.
சற்றேறத்தாழ ஒரு வருஷம் முன் 'என் இனிய இயந்திரா! ஆனந்தவிகடனில் தொடர்கதையாக வெளி வந்தபோது, முதல் அத்தியாயத்தின் இறுதியிலேயே 'ஜீனோ' என்கிற இயந்திர நாய் பேச ஆரம்பித்தது. முப்பத்து நான்காம் அத்தியாயத்தில் அதை ரவி-கால், காது, வால், பாட்டரி என்று அக்கக்காகப் பிரித்துப் போட்டான். ரவி தான் நிலாவின் வீட்டுக்கு ஒண்டுக் குடித்தனம் வரும்போது இந்த நாயையும் அழைத்து வந்தான். இதெல்லாம் நடந்தது (அல்லது நடக்கப் போவது) கி.பி. 2021-ல், ஜீவா என்கிற ஒரு மஹா சர்வாதிகாரியின் கட்டுப்படுத்தப்பட்ட நிழலில் மக்கள் ஒரு ஸிந்தெடிக் சொர்க்கத்தில் அனுமதிக்கப்பட்டு சந்தோஷங்களைப் பகிர்ந்துகொண்டு,உன்னதமான உணர்ச்சிகளுக்கெல்லாம் தடைவிதித்து, வயதானவர்களைக் கொன்று, அருமையான நூல்களை ரத்து செய்து, பாட்டையும் கூத்தையும் பண்பாட்டையும் நீக்கி ஆட்சி செய்யும் சூழ்நிலையில், 'மக்களாட்சி திரும்பி வரும் கழகம்' என்கிற ரகசிய அமைப்பினைச் சேர்ந்த ரவி, மனோ இருவரின் புரட்சித் திட்டங்களில் நிலா அகப்பட்டுக் கொள்கிறாள். அவள், கணவன் சிபியைக் காணாது அவனை தேடிச் சென்றபோது ரவி, மனோவின் பரிச்சயம் ஏற்படுகிறது. ஜீவாவின் ஆதிக்கத்தை முறியடிக்கும் வீர நோக்கங்கொண்ட அவர்களின் இயக்கத்துக்கு உதவி செய்கிறாள்.

உங்கள் கருத்துக்களை பகிர :
சுஜாதா :

கதைகள் :

விசா பப்ளிகேசன்ஸ் :