மீட்டாத வீணை
ஆசிரியர்:
பாலகுமாரன்
விலை ரூ.115
https://marinabooks.com/detailed/%E0%AE%AE%E0%AF%80%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%A4+%E0%AE%B5%E0%AF%80%E0%AE%A3%E0%AF%88?id=1556-1608-2015-8261
{1556-1608-2015-8261 [{புத்தகம் பற்றி என் இனிய பாலாவிற்கு அநேக நமஸ்காரங்கள். நலம். தங்கள் நலமும் சுற்றத்தார் நலமும் அறிய விருப்பம். தெரியப்படுத்தவும். பல்சுவை நாவலில் தாங்கள் எழுதிய மீட்டாத வீணையைப் படித்தேன். சிறிய, மெல்லிய நூலிழை போன்ற கருவைக் கொண்டு விதியின் விமர் சனத்தை விவரமாகச் சொல்லுகிற பக்குவம் உங்களுக்கே உரியது. அற்புதமாய் எழுதியிருந்தீர்கள். அதை விமர்சனம் செய்ய எனது சிற்றறிவுக்குத் தகுதி இல்லை. அதோடு ஜரிகைக் கனவுகள் என்கிற சினிமாவில் நுழைவதைப் பற்றி தொடர் கட்டுரை எழுதுகிறீர்கள். நல்லது. மாத நாவலில் கட்டுரை இல்லை. எதை எழுதினாலும் படிப்போம். எழுதுங்கள். தாங்கள் நிறைய எழுதுங்கள். இடைவிடாது எழுத இறைவனைப் பிரார்த்திக்கிறேன். தமிழரசியில் திருப்பூந்துருத்தி தொடர் எழுதி முடித் துள்ளீர்கள். அது புத்தகமாக வெளிவந்தவுடன் பொக்கிஷ மாகப் பாதுகாத்து வைக்க எனக்கு எண்ணம். எழும்பூர் ரயில்நிலையத்தில் ஒரு முப்பத்தைந்துவயது இளைஞரைப்பற்றி சொன்னீர்கள். அவருக்குப் பதிலாக நான் முதலில் மன்னிப்புக் கேட்கிறேன். உங்கள் கடிதம் இந்த வாசகர்களுக்கு ஞானபீட பரிசு. அதனால்தான் அப்படி வற்புறுத்துகிறார்கள். உங்களுடைய எண்ணமும் புரிகிறது. வகையாய் நெஞ்சிலிருந்து நெஞ்சத்தைத் தொட ஆசை என்கிற இந்த ஆசையே போதும் பாலா. நாவலிலே தாராளமாய் பேசுங்கள். கடிதம் எழுதத் தோன்றினால் தவிர எழுத வேண்டாம்.
<br/>- பிரியமுடன்
<br/>கோ. அன்பழகன்,
<br/>வேலூர்.}]}
-----------------------
www.marinabooks.com
80,000+ தமிழ்ப் புத்தகங்கள் !!!
10,000+ எழுத்தாளர்கள் !!!
1,000+ பதிப்பகங்கள் !!!
Call / SMS / WhatsApp 88834 88866